இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்!

Last Updated : May 1, 2017, 10:33 AM IST
இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்! title=

தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. 

இதனடிப்படையில் சோதனை முயற்சியாக பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி மாற்றும் திட்டம் முதன் முதலாக புதுச்சேரி, விசாகப்பட்டணம், ஆந்திரா, ராஜஸ்தானின் உதய்பூர், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. பிறகு படிப்படியாக நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் - டீசல் விலையை  நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை, இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், விலை மாற்றி அமைக்க படுகிறது. 

அரசியல் சூழ்நிலை காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட முடியாத நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பெட்ரோல் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் பெட்ரோல்-டீசல் விலையை மாற்றி அமைக்க படுகிறது.

அதன்படி  பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.03 ரூபாய் குறைந்து 66.05 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 19 பைசா குறைந்து 58.70 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்து, எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன!

மேலும் இது குறித்து அவர்கள் கூறியதாவது, ' புதுச்சேரி உள்ளிட்ட 5 நகரங்களில் மட்டும், மே 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகின்றன. 

எனவே பரிசோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த முறையின் தாக்கங்கள் கருத்தில் கொள்ளப்படும். பின்பு அவை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். இத்திட்டத்தின் வரவேற்பைப் பொறுத்து, இது நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும்' என்றார். 

இப்படி ஒவ்வொரு நாளும் மாறக்கூடிய பெட்ரோல்/டீசல் விலை, அதிகபட்சம் 10 பைசாக்குள்தான் இருக்கும் எனத் தெரிகிறது! 

Trending News