Crime News In Tamil: 29 வயதான பெங்களூரு வழக்கறிஞர் ஒருவர் FedEx ஊழலின் சமீபத்திய சிக்கி பல லட்சங்களை இழந்துள்ளார். மோசடி நபர் ஒருவர் சிபிஐ அதிகாரி போல நடித்து சுமார் 15 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளார். போதை மருந்து சோதனை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வீடியோ காலில் பேச வைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை போன் மற்றும் வீடியோ காலில் தன்னை அழைத்த மோசடி நபர்கள் பலமுறை மிரட்டி பணத்தை பறித்ததாக அந்த பெண் வழக்கறிஞர் போலீசில் தெரிவித்துள்ளார். புகார் அளித்தவருக்கு கொரியர் நிறுவனமான FedEx-ல் இருந்து முதலில் போன் வந்துள்ளது. அதில் தாய்லாந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக சில பொருட்களை அந்த வழக்கறிஞர் அனுப்பியதாக போனில் பேசியவர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர்.
போலீஸ் கெட்டப்பில் மோசடி
இந்த அழைப்பை மும்பை போலீஸுக்கு மாற்றுவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அதாவது கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசியவர், அந்த அழைப்பை போலீசுக்கு மாற்றுவதாக கூறியுள்ளார். அதன்பின் போலீஸ் போன்ற கெட்டப்பில் இருந்த நபர், தன்னை அபிஷேக் சவுகான் என்றும் தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும் கூறியுள்ளார்.
அவர் மனிதர்களை கடத்துதல், பண மோசடி மற்றும் அடையாள திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதோடு வழக்கறிஞரின் வங்கி கணக்கு மற்றும் ஆதார் விவரங்களை அனுப்பும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதோடு வேறு யாருக்கும் இதுகுறித்து கூறக்கூடாது என்றும் அப்படி போலீசுக்கு சொன்னால் அதுவும் விதிமீறல் என்றும் சொல்லியுள்ளார்.
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
இதனால் வழக்கறிஞரும் செய்வதரியாது தவித்துள்ளார். வீடியோ காலில் வழக்கறிஞர் வந்தபோது அதனை பதிவு செய்து ஆபாச வீடியோக்களை தயாரித்து மிரட்டியுள்ளது அந்த மோசடி கும்பல். அதோடு வழக்கறிஞர் குடும்பத்துக்கும் ஆபாச படங்கள் அனுப்பப்படும் என அச்சுறுத்தியுள்ளனர். இப்படியே மிரட்டி 15 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கடுப்பான வழக்கறிஞர், இறுதியாக போலீசுக்கு சென்றுள்ளார். அப்போது தான் இது முழுக்க முழுக்க ஒரு மோசடி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்கறிஞரை ஏமாற்றிய கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டார்க் வெப்பில் அவரது நிர்வாண வீடியோக்களை விற்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல லட்ச ரூபாய் மோசடி
அதோடு FedEx நிறுவனமும், தங்கள் நிறுவனம் எப்போதும் தனிப்பட்ட நபர்களின் விவரங்களை கேட்காது என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது தகவல்களை கேட்டால் வாடிக்கையாளர்கள் வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சமீப நாட்களாக FedEx பெயரில் இப்படி பல லட்சம் ரூபாய் மோசடி நடப்பது தொடர்வது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ