இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதன்கிழமை வீட்டிலேயே கோவிட் -19 பரிசோதனையை செய்துகொள்ளும் சோதனைக்கான ஆலோசனையை வெளியிட்டது. இதன் மூலம், எந்த ஒரு மருத்துவ நிபுணரும் அருகில் இல்லாமல், யார் வேண்டுமானாலும் தங்களுக்கு கோவிட் தொற்று உள்ளதா என்பதை சோதித்துக்கொள்ள முடியும்.
இந்த சோதனையை (Testing) எவ்வாறு செய்வது என்பது குறித்த விவரங்களை அளித்த ஐ.சி.எம்.ஆர், வீட்டு சோதனை செய்ய, கோவிசெல்ஃப் (CoviSelf ) என்ற ஒரு கிட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாசித் துவாரத்திலிருந்து மாதிரியை எடுப்பதற்கான பஞ்சுடன் கூடிய நேசல் ஸ்வேப் மட்டுமே இந்த விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு (Rapid Antigen Testing) தேவைப்படும்.
" சுயமாக சேகரிக்கப்பட்ட நாசி ஸ்வாப் மாதிரியை வைத்து சோதனை செய்துகொள்ளும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கும், 2 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு முதியவர்கள் சேகரித்த மாதிரிகளுக்கும் கோவிசெல்ஃப் சோதனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது"
For more details visit https://t.co/dI1pqvXAsZ @PMOIndia #ICMRFIGHTSCOVID19 #IndiaFightsCOVID19 pic.twitter.com/membV3hPbX
— ICMR (@ICMRDELHI) May 19, 2021
ஐ.சி.எம்.ஆர் (ICMR) தனது ஆறிவுறுத்தலில், இதை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளது. அறிகுறிகளைக் கொண்டவர்களும், ஆய்வகங்கள் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் மட்டுமே இந்த சோதனையை செய்துகொள்ள வேண்டும் என ICMR கூறியுள்ளது.
இந்த கிட்டை பயன்படுத்துவது எப்படி
கிட்டுடன், முழு செயல்முறையையும் விவரிக்கும் ஒரு கையேடு கிடைக்கும். ஐ.சி.எம்.ஆரும் பயனர்களின் வசதிக்காக வீடியோ இணைப்புகளை வழங்கியது. இந்த வீடியோவில் கிட்டை பயன்படுத்துவது குறித்த விவரங்கள் உள்ளன.
இந்த கிட்டில் நாசி மாதிரிகள் எடுப்பதற்கான ஒரு துணி, நிரப்பப்பட்ட பிரித்தெடுக்கும் குழாய் மற்றும் ஒரு சோதனை கிட் ஆகியவை ஒரு பையில் கிடைக்கின்றன.
இந்த சோதனை கிட்டை வாங்குபவர்கள் Mylab Coviself செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்வேபை பயன்படுத்தி இரு நாசித் துவாரங்களிலும் குறைந்தது 10 முறையாவது மென்மையாக சுழற்றி நாசியில் உள்ள மாதிரியை சேமித்துக் கொள்ளவும். பின்னர் அதை, கிட்டில் கொடுக்கப்பட்டுள்ள திரவம் நிரப்பப்பட்ட குழாயில் செலுத்திவிட்டு ஸ்வேபின் மீதமுள்ள பகுதியை உடைத்துவிடவும்.
ALSO READ: நீண்ட உபாதைகள் இருப்பவர்களுக்கு புதிய கருப்புப் பூஞ்சை உருவாகிறது: ICMR!
அதன் பிறகு அந்த திரவத்தில் இரண்டு சொட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக சோதனை அட்டையில் உள்ள கன்ட்ரோல் (C) என்ற பகுதியில் விடவும். முறையான சோதனை முடிவுகள் தோன்றுவதற்கு 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு தோன்றும் முடிவுகள் செல்லாது.
சோதனை முடிவு பாசிட்டிவ் என்றால் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் டெஸ்ட் (T) என்ற துவாரத்தில் மற்றொரு அழுத்தமான கோடு உண்டாகும். சோதனை முடிவு நெகட்டிவ் என்றால் கன்ட்ரோல் (C) என்ற பகுதியில் மட்டும் கோடு இருக்கும். சோதனை செய்து முடித்த பின்னர் கிட்டின் அனைத்துப் பகுதிகளையும் பயோ ஹசார்ட் பையில் வைத்து அப்புறப்படுத்த வேண்டும்.
மொபைல் செயலியின் தரவு, ஐசிஎம்ஆர் கோவிட் -19 சோதனை போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான சேவையகத்துடன் இணைக்கப்படும் என்று ஐசிஎம்ஆர் அதன் வழிகாட்டுதலில் கூறியுள்ளது. நோயாளியின் ரகசியத்தன்மைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கூடுதலான சோதனை தேவையில்லை என்றும் இந்த சுய சோதனையிலேயே சரியான பரிசோதனை முடிவுகள் தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது. அறிகுறிகள் இருந்து, இந்த சோதனையில் 'நெகடிவ்' என வந்தால், அவர்கள் RT-PCR சோதனையை செய்து கொள்ளலாம். அறிகுறிகள் இருந்து 'நெகடிவ்' என வந்தவர்கள் சந்தேகத்திற்குரிய கோவிட் -19 (COVID-19) நபர்களாக கருதப்படுவார்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR