சென்னை: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மாணவர்கள் நேரடியாக தேர்ச்சி பெற்றதாகவும், 9 மற்றும் 11 வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புக்கு செல்வார்கள் என மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 1 முதல் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து சிபிஎஸ்இ மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்துமாறு சிபிஎஸ்இவிடம் கேட்டுள்ளதாக ஆர்.டி அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் புதன்கிழமை அறிவித்தார்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பள்ளியில் உள்ளக மதிப்பீட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்ப ஆலோசனை செய்யுமாறு சிபிஎஸ்இ-யிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
Announcement
In view of the current situation due to #COVID19, I have advised @cbseindia29 to promote ALL students studying in classes I-VIII to the next class/grade. #CoronavirusPandemic pic.twitter.com/zvklNiJ4Tj— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 1, 2020
"இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகள், குறிப்பிட்ட கால தேர்வுகள் உள்ளிட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் IX & XI வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அடுத்த வகுப்பு / தரத்திற்கு உயர்த்தப்படுவார்கள்" என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
"இந்த நேரத்தில் பள்ளி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சோதனை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் தேர்வு எழுதலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
"பாதுகாப்பாக இருங்கள், நன்றாகப் படிக்க வேண்டும்" என்று மாணவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார் மனிதவள மேம்பாட்டு அமைச்சர்.