புது டெல்லி: கோவிட் -19 காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால், மக்கள் வெளியில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் ஏழை வீடுகளுக்கு மூன்று மாதங்களில் எட்டு இலவச சிலிண்டர்களை நிரப்பிக்கொள்ள உரிமை உண்டு. அதே நேரத்தில் 14.2 கிலோ சிலிண்டர்களைப் பயன்படுத்தும் ஏழை குடும்பம் மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம் என எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மார்ச் 26 அன்று அரசாங்கம் அறிவித்த ரூ .1.7 லட்சம் கோடி கோவிட் -19 நிதித்தொகுப்பு (நாடு தழுவிய பூட்டுதல் நடைமுறைக்கு வந்த ஒரு நாள் கழித்து) சுமார் 80 மில்லியன் ஏழை வீடுகளுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் என்று மட்டுமே குறிப்பிட்டது. இது சில குழப்பங்களுக்கு வழிவகுத்தது. அதாவது 5 கிலோ சிலிண்டர்களைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கும் வெறும் மூன்று சிலிண்டர்கள் மட்டும் இலவசமாக கிடைக்குமா? அல்லது அதற்கு அதிக எண்ணிக்கையில் கிடைக்குமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து "பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பி.எம்.ஜி.கே.ஒய்) திதிட்டத்தின் கீழ், "சிறிய சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் எட்டு இலவச சிலிண்டர்கள் கிடைக்கும்" என்று எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்தார்.
தற்போது வரை, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் 71 மில்லியனுக்கும் அதிகமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (பி.எம்.யூ.ஒய்) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ .5,606 கோடியை முன்கூட்டியே செலுத்தப்பட்டது. எனவே அவர்கள் எல்பிஜி சிலிண்டரை இலவசமாகப் பெற முடியும் என்பதை உறுதிசெய்யும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
50 மில்லியன் ஏழை வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் 2016 மே 1 அன்று பல்லியாவில் (உத்தரபிரதேசம்) PMUY தொடங்கப்பட்டது. பின்னர் அதன் இலக்கு 80 மில்லியன் வீடுகளாக உயர்த்தப்பட்டது. இது 2019 செப்டம்பர் 7 அன்று ஆறு மாதங்களுக்கு முன்பே, இந்த இலக்கை மத்திய அரசு எட்டியது.
இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளரான அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐ.ஓ.சி) நிர்வாகி ஒருவர், தனது 37 மில்லியன் பி.எம்.யூ.வி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ .2,780 கோடியை செலுத்தப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் முதல் சமையல் எரிவாயு சிலிண்டரை இலவசமாகப் பெற முடியும் என்றார்.
இந்தியாவில் செயலில் உள்ள சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை (மானியத்தின் பயனாளிகள் உட்பட) 27.87 கோடி.
ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதில் இருந்து, நாட்டில் தினமும் 50 முதல் 60 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. நாடு தழுவிய லாக்-டவுன் மற்றும் மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்போது, எல்பிஜி விநியோக ஊழியர்கள் மற்றும் எல்பிஜி விநியோக ஏஜென்சிகள் எரிபொருள் நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் செல்வதை உறுதி செய்ய அயராது உழைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.