குழந்தைக்கு பெயர் வைக்க, தேர்தல் நடத்திய தம்பதியர்!

பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது சாதரண விஷயம் தான், ஆனால் மகாராஷ்டிர மாநிலம் கொண்டியா பகுதியைச் சேர்ந்த தம்பதியர் குழந்தையின் பெயரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தியுள்ளனர்.

Last Updated : Jun 20, 2018, 12:43 PM IST
குழந்தைக்கு பெயர் வைக்க, தேர்தல் நடத்திய தம்பதியர்! title=

கொண்டியா: பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது சாதரண விஷயம் தான், ஆனால் மகாராஷ்டிர மாநிலம் கொண்டியா பகுதியைச் சேர்ந்த தம்பதியர் குழந்தையின் பெயரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தியுள்ளனர்.

மிதுன் மற்றும் மனாசி என்னும் இத்தம்பதியர் தங்கள் குழந்தையில் பெயரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் கொண்டுள்ளனர். இதனால் பெயரை தேர்ந்தெடுக்க தேர்தல் வைத்து பெயர் சூட்டியுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் நடப்பது போல தேர்தலுக்கென ஓர் தனி இடத்தை ஏற்பாடு செய்து கடந்த ஜூன் 15-ஆம் நாள் அன்று தேர்தல் நடத்தியுள்ளனர் இத்தம்பதியினர்.

தேர்தல் சீட்டில் இத்தம்பதியினர் யாக்ஷா, யோவிக் மற்றும் யுவன் என்னும் 3 பெயர்களை குறிப்பிட்டு தேர்தல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் தந்தை மிதுன் தெரிவிக்கையில்... எனது குழந்தையின் பெயரை சூட்டுவதில் நான் புதுமையினை புகுத்த விரும்பினேன். வழக்கமான பெற்றோர்களைப் போல் வெறும் ஜோதிடத்தினை மட்டும் நம்பாமல், உறவினர்களின் விருப்பத்தினையும் கேட்க விரும்பினேன். எனவே ஜோதிட முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பெயர்களை தேர்ந்தெடுத்து அதனை உறவினர்களுக்கான தேர்வுகளாய் அளித்தேன் என தெரிவித்துள்ளார்.

அதேவேலையில் குழந்தையின் அத்தை தெரிவிக்கையில்... நான் வாக்கிட்ட பெயரே குழந்தைக்கு வைக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. என்னால் மட்டும் அல்ல, சம்பந்தப்பட்ட குழந்தைக்கும் தான், 20 வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தாலும் தனது பெயரின் வரலாற்றை கண்டு அவன் ஆச்சரியப்படுவான் என தெரிவித்துள்ளார்.

இறுதியாக இந்த வாக்கெடுப்பில் யுவன் என்னும் பெயர் வெற்றிப்பெற்றதை அடுத்து குழந்தைக்கு யுவன் என்னும் பெயர் வைக்கப்பட்டது.

Trending News