ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும் -ராகுல்காந்தி!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும் என அக்கட்சி தலைவர் ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

Last Updated : Jul 22, 2018, 06:24 PM IST
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும் -ராகுல்காந்தி! title=

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும் என அக்கட்சி தலைவர் ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காரிய கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி; அனுபவம் மற்றும் சக்தி நிறைந்தாக செயற்குழு மாற்றப்பட்டுள்ளது. கடந்த காலம், நிகழ் மற்றும் வருங்காலத்தை இணைப்பதாகவும் உள்ளது. நாட்டு மக்களின் குரலாக காங்கிரஸ் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மகளிர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

இதை தொடர்ந்து மன்மோகன் சிங் பேசுகையில், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க அனைத்து நிர்வாகிகளிடம் ராகுல் காந்தி கருத்துக் கேட்டு வருகிறார். இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிபாகும் என பிரதமர் மோடி கூறியது சாத்தியமில்லை என்று மன்மோகன் சிங் கூறியதாக குறிப்பிட்டார். 

வேளாண் வளர்ச்சி 14% என்பதும் சாத்தியமில்லை என்றும் ஒடுக்கப்பட்ட பெண்கள் எழுச்சியுடன் போராட வேண்டும் என்றும் சுர்ஜிவாலா கூறியுள்ளார். மேலும், மாநில கட்சிகளுடனான கூட்டணி அமைப்பது, கட்சியின் சவால்கள், தேசத்துக்கான மாற்றுப் பாதையை முன்னிறுத்துவது உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்தும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

 

Trending News