கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்!!
கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது குறித்து பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலத்தின் கொல்லம் தொகுதியில் அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, இந்தியாவில் காங்கிரஸின் எண்ணங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என கூறினார். இதற்கான பதிலாக காங்கிரஸ், மோடியிடம் என்ன கூறுகிறது என்றால், நாங்கள் உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை. உங்கள் தவறை சுட்டிக்காட்ட நிச்சயம் போராடுவோம். தேர்தலில் உங்களை தோற்கடிப்போம். ஆனால் உங்களுக்கு எதிராக எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட்டோம்.
R Gandhi in Kollam: As PM said 'Congress mukt Bharat', meaning we'll erase idea of Congress from India.What Congress says to Narendra Modi is we don't agree with you.We'll fight you to convince you, you're wrong. We'll beat you in e election but we won't use violence against you. pic.twitter.com/W7ZpSZxRq6
— ANI (@ANI) April 16, 2019
மேலும், வட இந்தியாவில் உள்ள அமேதி தொகுதியில்தான் நான் எப்போதும் போட்டியிட்டு வருகிறேன். ஆனால், இந்த முறை கேரளாவில் போட்டியிடுவதன் மூலமாக தென்னிந்தியாவுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்பினேன். இந்தியா என்பது ஒற்றை கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஒற்றை சிந்தனையின் அடிப்படையில் அமைந்தது அல்ல; அது ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான வெவ்வேறு சிந்தனைகள் மற்றும் கண்ணோட்டங்களை உள்ளடக்கியது. அது நமக்கு மிக முக்கியமானது’’ என்றார் ராகுல் காந்தி.