Congress In Haryana Election Updates 2024: காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையத்திற்கு இன்று எழுதி உள்ள கடிதத்தில்,"காலை 9-11 மணிக்கு இடையே கடந்த இரண்டு மணிநேரங்களில், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முடிவுகளைப் புதுப்பிப்பதில் விவரிக்க முடியாத அளவிற்கு மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இவை தவறான தகவல்களை பரப்ப நினைப்பவர்களுக்கு பெரும் சாதகமாக அமைகிறது.
சமூக ஊடகங்களில் ஏற்கனவே உலாவி வரும் பல உதாரணங்களை நீங்கள் பார்க்கலாம். வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெரும்பாலான வாக்கு எண்ணும் மையங்களில், இத்தகைய வதந்திகளை சிலர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் எங்கள் அச்சம். தவறான செய்திகள் மற்றும் தீங்கிழைக்கும் வதந்திகளை உடனடியாக எதிர்கொள்ளும் வகையில், உண்மை மற்றும் துல்லியமான புள்ளிவிவரங்களுடன் வலைத்தளத்தைப் புதுப்பிக்க உங்கள் அதிகாரிகளுக்கு உடனடி வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்க கட்டத்தில் காங்கிரஸ் கட்சி சுமார் 70 தொகுதிகள் வரை முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், நேரம் செல்ல செல்ல காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து, பாஜக முன்னிலை பெறத் தொடங்கியது. அப்போது தொடங்கிய முன்னிலை இப்போது வரை பாஜக 50 தொகுதிகள் வரை முன்னிலை பெற்று வருகிறது. மறுபுறம் காங்கிரஸ் 35 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
VIDEO | "We have information that there are about 9-10 seats where 11-12 rounds of counting has been completed, however, the EC website and (TV) channels are showing trends available after only 4-5 rounds of counting. A kind of psychological games, mind games are being played.… pic.twitter.com/Mlwai2ZSyj
— Press Trust of India (@PTI_News) October 8, 2024
மேலும் படிக்க | ஹரியானாவில் வெற்றி பெற்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகட்! எவ்வளவு ஓட்டுகள் தெரியுமா?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவையும், ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடனும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி ஜம்முவில் காங்கிரஸ் கூட்டணியும், ஹரியானாவில் பாஜகவும் வெற்றியை நெருங்கி வருகின்றன. இந்நிலையில்தான், காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையம் அதன் தளங்களிலும், செயலிகளிலும் முடிவுகளை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கெரா உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அரசியல் நோக்கர்கள் அதிர்ச்சி
ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 46 இடங்களை ஒரு கட்சி கைப்பற்றும்பட்சத்தில் ஆட்சியை பிடிக்கும். கடந்த 2014ஆம் ஆண்டில் பாஜக 47 தொகுதிகளை பெற்று ஆட்சி அமைத்தது. 2019ஆம் ஆண்டில் பாஜக 40 தொகுதிகளை பெற்றிருந்தாலும், ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்கள், 7 சுயேட்சை எம்எல்ஏக்கள் உடன் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. தற்போது மூன்றாவது முறையாக தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில் இதுவரை யாரும் மூன்று முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்து இல்லை. ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஜாட் சமூகத்தில் நீடித்த அதிருப்தி, மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை என பல விவகாரங்கள் பாஜகவுக்கு எதிராக இருந்தாலும் ஆட்சியை தக்கவைக்கும் அளவிற்கு வாக்குகளை தற்போது பெற்றிருப்பது அரசியல் நோக்கர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மறுபுறம் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்க அதிக வாய்ப்புள்ளது. தற்போது காங்கிரஸ் கூட்டணி அங்கு 48 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு தேர்தல் நடைபெறும் வேளையில், காங்கிரஸ் கூட்டணி வெற்றியை நெருங்குவது அக்கட்சிக்கு நிச்சயம் ஆறுதல் அளிக்கும் ஒன்றாகும்.
மேலும் படிக்க | பாஜக ஹரியானாவில் முன்னிலை பெற்றது எப்படி...? காங்கிரஸ் காலை வாரிவிட்ட தொகுதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ