ZEE Maha Exit Poll: மத்திய பிரதேசத்தில் தொங்கு ஆட்சி அமைய வாய்ப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக அமைய, காங்கிரஸ் தொங்கு ஆட்சியினை அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய பல கருத்துக்கணிப்புகள் கணிக்கின்றன.

Last Updated : Dec 7, 2018, 07:06 PM IST
ZEE Maha Exit Poll: மத்திய பிரதேசத்தில் தொங்கு ஆட்சி அமைய வாய்ப்பு! title=

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக மீண்டும் கோட்டையை பிடிக்குமா? காங்கிரஸ் கட்சியிடன் விட்டுச்செல்லுமா?... மத்தியபிரதேச மாநில மக்களின் தலையெழுத்து வாக்காக பெட்டிகளில் அடைக்கப்பட்டு முடிவை நோக்கி சென்றுள்ளது. வரும் டிசம்பர் 11-ஆம் நாளே இம்மாநில மக்களின் தலைவர் யார் என்பது தெரியவரும்!...

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிக இடங்களை வைத்திருக்கும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் கட்சி மத்தியிலும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என்பதால் இம்மாநிலத்தின் மீது நாட்டு மக்களின் கவனம் சென்றுள்ளது. 

இம்மாநிலத்தில் நான்காவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர பாஜக-வின் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் கல்ஊன்றியுள்ளார். எனினும் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பாஜகவிற்கு எதிராக எழுந்து வரும் புகார்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் முதல்வர் நாற்காலியினை காங்கிரஸ் பக்கம் தள்ளிவிட வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக அமைய, காங்கிரஸ் தொங்கு ஆட்சியினை அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய பல கருத்துக்கணிப்புகள் கணிக்கின்றன. எனினும் சில கருத்துக்கணிப்புகள் இதற்கு மாற்று கருத்தினையும் வெளியிட்டு வருகின்றன.

CNX Exit poll... 126 தொகுதிகளுடன் பாஜக வெற்றி பெறும், காங்கிரஸ் - 89, BSP - 6, இதர கட்சிகள் 9 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கின்றது.

Axis poll... 113 தொகுதிகளுடன் காங்கிரஸ் வெற்றி பெறும், பாஜக - 111, இதரவை - 6 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கின்றது.

C-Voter poll... 110-126 இடங்களை காங்கிரஸ் பிடித்து ஆட்சியமைக்க பாஜக 90-106 இடங்களை பெறும் என குறிப்பிட்டுள்ளது.

Lokniti-CSDS... 126 இடங்களுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்க பாஜக 94 இடங்களை பெறலாம் என குறிப்பிட்டுள்ளது.

ஆக., முதன்மை நிறுவன கருத்துகணிப்புகளின் படி ஒரேவொரு கணிப்பு மட்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் எனவும், மற்ற கருத்துக்கணிப்புகள் தொங்கு ஆட்சியே அமையும் எனவும் தெரிவிக்கின்றன. எத்தனை கருத்துகணிப்புகள் வந்தாலும் முடிவு வரும் டிசம்பர் 11-ஆம் நாள் தெரியவந்துவிடும்... பெறுத்திருந்து பார்ப்போம்... 

Trending News