பிரதமர் மோடி இந்தியாவை பிளவுப் படுத்துகின்றார் -ராகுல் காந்தி!

பிரதமர் மோடி இந்தியாவை பிளவுப் படுத்துகின்றார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2018, 08:00 PM IST
பிரதமர் மோடி இந்தியாவை பிளவுப் படுத்துகின்றார் -ராகுல் காந்தி! title=

பிரதமர் மோடி இந்தியாவை பிளவுப் படுத்துகின்றார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்!

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள சவக்ராம் ஆசிரமத்தில் ஏற்படு செய்யப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், புதுச்சேரி முதலமைச்சர் V நாராயணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், சுஷில் குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோனி, முன்னாள் அரியானா முதலமைச்சர் பி.எஸ். ஹூடா மற்றும் முன்னாள் உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் ஆகியோர் இந்த பிராத்தனை கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து 'காந்தி சங்கல்ப யாத்திரை’ என்ற அமைதி பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பின்னர் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி, பிரதமர் மோடி இந்தியாவை பிளவுப்படுத்துகின்றார் என கடுமையாக சாடினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்ததாவது...

“இந்தியாவின் ஒற்றுமைக்காக மகாத்மா காந்தி பணியாற்றினார், ஆனால் மோடி இந்தியாவை பிளவுப்படுத்த பணியாற்றி வருகிறார்,

இந்தியாவை ஒருங்கிணைப்பது பற்றி மகாத்மா காந்தி பேசினார், ஆனால் மோடி ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக தூண்டிவிடுவதன் மூலம் பிரித்து வருகின்றார்" என குறிப்பிட்டார்.

மேலும், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அவர் அதுகுறித்து பேச வேண்டும் என்றார். ரபேல் போர் விமானம் விவகாரத்தில் அரசு நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு அம்பானியின் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அவர் என் கண்களை பார்க்க தயங்கினார். பொய் கூறியதால் தான் அவரால் என் கண்களை பார்க்க முடியவில்லை என சாடியுள்ளார் ராகுல் காந்தி!

Trending News