பாரத் ஜோடோ யாத்திரை 2.0... மக்களவை தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

2024 தேர்தலை மையமாக வைத்து, போர்பந்தரில் இருந்து அகர்தலா வரை ராகுலின் பாரத் ஜோடோ யாத்ரா 2.0 நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 28, 2023, 06:23 PM IST
  • ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா 2.0 என்ற திட்டத்தை செப்டம்பர் மாதம் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
  • மூத்த தலைவர் திக்விஜய் சிங் கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
பாரத் ஜோடோ யாத்திரை 2.0... மக்களவை தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!  title=

புதுடெல்லி: நான்கு மாநிலங்கள் மற்றும் 2024 தேசிய தேர்தல்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா 2.0 என்ற திட்டத்தை செப்டம்பர் மாதம் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கட்சியின் உள் வட்டாரம் வழங்கிய தகவல்களின்படி, பாரத் ஜோடோ யாத்ரா தேசிய ஒருங்கிணைப்புக் குழு ராகுலின் நாடு தழுவிய யாத்திரை 2.0 குறித்து மூத்த தலைவர் திக்விஜய் சிங் கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் கலந்துரையாடினார். 

யாத்திரை பகுதி 2 தொடங்குவது குறித்து கட்சிக்குள் பொதுவான ஒருமித்த கருத்து இருந்தாலும், தொடங்கும் தேதி மற்றும் பாதை தொடர்பான இரண்டு முக்கிய அம்சங்கள் தலைவர்களிடையே இன்னும் விவாதிக்கப்படுகின்றன. தெற்கு முதல் வடக்கு யாத்திரையில் செய்தது போல் மேற்கு முதல் கிழக்கு இந்தியா வரை முழுவதையும் உள்ளடக்க வேண்டுமா அல்லது பாத யாத்திரையை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டுமா என்பது குறித்து ஒருங்கிணைப்புக் குழு விவாதித்ததாக கட்சியினர் தெரிவித்தனர். 

 நவம்பரில் நடக்கக்கூடிய ஐந்து சட்டமன்றத் தேர்தல்களுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் நாங்கள் தயாராகி வருவதால் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. மாநில யாத்திரைகள் உள்ளூர் பகுதிகளில் திட்டமிடப்படலாம் என்றும், வரும் நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் வரக்கூடும் என்பதால், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவும், நமது பிரச்சாரத்தை உச்சப்படுத்தவும் இந்த மாநிலங்களிலும் யாத்திரைகளைத் திட்டமிடலாம் என்று AICC உறுப்பினர்கள் கூறினர். 

மேலும் படிக்க | பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’

பாரத் ஜோடோ யாத்திரை முதற் கட்ட பாரத் ஜோடோ யாத்திரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்டது. செப்டம்பர் 7, 2022 அன்று தொடங்கிய யாத்திரை ஜனவரி 30, 2023 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் முடிவடைந்தது. இந்த யாத்திரை பகுதி 2 குஜராத்தில் உள்ள போர்பந்தரில் இருந்து திரிபுராவின் அகர்தலா வரை மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவை உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து தனது யாத்திரையைத் தொடங்குவதற்கு முன் செப்டம்பர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை செய்தார். குஜராத் மகாத்மா காந்தியின் தேசம் என்பதால், மகாத்மாவின் பிறந்த இடமான போர்பந்தரில் இருந்து அவர் தனது இரண்டாவது யாத்திரையை தொடங்கினால் நல்லது என கட்சியினர் எண்ணுகின்றனர்.

தெற்கு முதல் வடக்கு வரையிலான யாத்திரை மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் 2024-ல் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக் கூடிய ஒரே தேசியத் தலைவர் ராகுல் காந்தி தான் என்பதைக் காட்டியது என்று கட்சி தலைவர்கள் சிலர் கூறினார். “தேசம் தழுவிய செய்தியை அனுப்புவதற்காக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று யாத்திரை தொடங்க வேண்டும் என்று சிலர் விரும்பினாலும், அடுத்த மாதத்தில் மழை இருக்கலாம். ஆகஸ்ட் மாதம் யாத்திரையை முன் கூட்டியே முடிக்க அனுமதிக்கும் அதே வேளையில், வானிலை காரணமாக செப்டம்பர் மிகவும் நடைமுறைக்குரியதாக இருக்கும்,” என்று AICC உறுப்பினர் ஒருவர் கூறினார்.

மேலும் படிக்க | நாட்டாமை... தீர்ப்பை மாத்தி சொல்லு! ராகுல் காந்தியின் பதவி பறிப்பும் சட்ட விளக்கமும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News