பெங்களூருவில் எதிர்க்கட்சிகள்... இன்றிரவு விருந்துடன் தொடங்கும் கூட்டம் - முழு விவரம்!

Opposition Parties Meeting: பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையும் வகையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் இன்று, நாளையும் நடைபெறுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 17, 2023, 07:37 AM IST
  • இதில் 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்ப்பு.
  • முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவில் நடைபெற்றது.
  • இந்த கூட்டத்தை காங்கிரஸ் கட்சி தலைமை தாங்குகிறது.
பெங்களூருவில் எதிர்க்கட்சிகள்... இன்றிரவு விருந்துடன் தொடங்கும் கூட்டம் - முழு விவரம்! title=

Opposition Parties Meeting: 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கான வியூகத்தை வகுப்பதில் எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறும் இரண்டு நாள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் எனவும் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் சார்பில் முன் நடத்தப்படும் இந்த கூட்டத்திற்கு முன், டெல்லி தொடர்பான அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்ப்போம் என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியது. பாட்னாவில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி, அடுத்த கூட்டத்தில் தங்கள் கட்சி சார்பில் கலந்துகொள்ள வேண்டுமானால் பொதுவெளியில் டெல்லி அவசர சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. 

முதல் கூட்டத்தில் 15 கட்சிகள்

இதன்பேரில், காங்கிரஸ் கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 23 அன்று பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடத்திய பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டத்தில் 15 கட்சிகள் கலந்து கொண்டன.

நெருக்கடி கட்டத்தில் நடைபெறும் கூட்டம்

இந்த முறை 26 கட்சிகளின் தலைவர்களை எதிர்பார்க்கிறோம் என்று இதன் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (NCP) பிளவு மற்றும் மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்களில் அடக்குமுறை ஏற்பட்டதன் பின்னணியிலும் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 

மேலும் படிக்க | வளையல் அணிய தடை... மத்திய அரசு விதித்தது தான்... கர்நாடகா அரசு

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை

குறிப்பாக, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிந்த பிறகு, பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கூட்டுப் போராட்டத் திட்டத்தை வகுக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜகவை எதிர்கொள்வதற்கு மேலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான நடவடிக்கைகளை தலைவர்கள் அறிவிப்பார்கள் என்றும், "எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை கவிழ்பதற்கும், பாஜக அல்லாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் அதன் முயற்சிகளை அம்பலப்படுத்துவோம்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பாஜகவின் குற்றச்சாட்டு

"இது ஒரு தீர்க்கமான கூட்டமாக இருக்கும். பல விஷயங்கள் விவாதிக்கப்படும்" என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகளில் ஒற்றுமையில்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிப்பதைத் தவிர வேறு எந்த திட்டமும் இல்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியது.

எதிர்க்கட்சிகள் தங்களது வாரிசு அரசியலை "பாதுகாக்க" கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார். முன்மொழியப்பட்ட கூட்டணி "தேசபக்தி ஜனநாயகக் கூட்டணி" அல்ல, மாறாக "வாரிசுகள் பாதுகாப்புக் கூட்டணி" என்று ஜெய்ப்பூரில் நட்டா பேசியிருந்தார். 

மேலும் ஒரு படி

இரண்டு நாள் கூட்டத்தொடர் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் கூட்டு உறுதியை நிரூபிக்கும் வகையில் ஒரு படி மேலே இருக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா தெரிவித்தார். "பாஜகவை தோற்கடிப்பதற்காகவும், தேசத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்சிகளை ஒன்றிணைப்பதில் பெங்களூரு கூட்டம் மற்றொரு படியாக இருக்கும்" என்று டி.ராஜா தெரிவித்தார்.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு 

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்வார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, பீகார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஜே.எம்.எம். தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இரண்டாம் நாள் கூட்டம்

"இன்று, காங்கிரஸ் கட்சி டெல்லி அவசரச் சட்டத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதனுடன், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்து கொள்ளும்" என்று ஆம் ஆத்மியின் ராகவ் சாதா கூறினார்.

இரண்டு நாள் அமர்வு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்தும் இரவு உணவு விருந்து உடன் தொடங்கும் மற்றும் செவ்வாய்கிழமை மற்றொரு முறையான சந்திப்பு, அதன் பிறகு அவர்கள் தங்கள் ஒற்றுமைத் திட்டங்களை உறுதிப்படுத்தி தங்கள் அடுத்த திட்டத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அயோத்தி பாபர் மசூதி கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டது! அறக்கட்டளையின் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News