ஊழலை ஆதரிக்கும் பாஜக! தொண்டர்களின் உயிரையும் மதிப்பதில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

BJP Endorses Corruption: பாஜகவுக்கும் பிரதமருக்கும் ஊழல் பெரிய விஷயமில்லை, கட்சித் தொண்டர்களின் உயிரும் பெரிய விஷயமில்லை என்று போட்டுத் தாக்கும் காங்கிரஸ் கட்சி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 21, 2023, 06:39 PM IST
  • களேபரமாகும் கர்நாடக தேர்தல் களம்
  • ஊழல்வாதிகளை பாராட்டும் பிரதமர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
  • கட்சித் தொண்டர்களின் உயிருக்கு மதிப்பில்லை?
ஊழலை ஆதரிக்கும் பாஜக! தொண்டர்களின் உயிரையும் மதிப்பதில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு title=

புதுடில்லி: வரவிருக்கும் மாநில சட்டசபை தேர்தலில் கட்சி டிக்கெட் மறுக்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை வீடியோவில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதை அடுத்து, பாஜக ஊழலை ஆதரிப்பதாக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது. தேர்தல் சீட்டு வழங்கப்படாவிட்டாலும் கலகம் செய்யாத ஈஸ்வரப்பாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்கட்சியினர் தெரிவித்தனர்.

2022 ஏப்ரலில் கர்நாடகாவின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பதவியில் இருந்து ஈஸ்வரப்பா விலகினார். பெலகாவியில் ஈஸ்வரப்பா பொதுப்பணித்துறையில் 40 சதவீதம் கமிஷன் வசூலித்ததாக குற்றம் சாட்டிவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலின் வழக்கில், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் ஈஸ்வரப்பாவுக்கு க்ளீன் சிட் கிடைத்தது.
 
முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சமீபத்தில் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக பாஜகவின் மத்திய தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருந்தார்,  ஆனால் அவரது மகன் கே இ காண்டேஷுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Karnataka Election: கர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?

ஆனால், மூத்த தலைவரின் கோரிக்கையை ஏற்காத பாஜகவின் மத்திய தலைமை, சன்னபசப்பாவுக்கு சீட்டு வழங்கியது. அதையடுத்து, கட்சி டிக்கெட் மறுக்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பிரதமர் நரேந்திர மோடி அழைத்து பேசினார்.

ஈஸ்வரப்பா மோடியுடன் தொலைபேசியில் பேசும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்த நபர் 40 சதவீத கமிஷன் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், மேலும் பாஜக தொண்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்ட பிறகு ஊழல் குற்றச்சாட்டில் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று கூறியது.

“இதுபோன்ற ஊழல் தலைவர்களைப் புகழ்வதன் மூலம், பாஜக ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அங்கீகரிக்கிறது என்ற தெளிவான செய்தியை அனுப்புகிறது,” என்று அது மேலும் கூறியது. அந்தக் காணொளியில், பிரதமர், "நீங்கள் கட்சி மீதான உங்கள் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளீர்கள். உங்களால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதனால், உங்களுடன் பேச முடிவு செய்தேன்" என்று கூறுவது கேட்கிறது.

கர்நாடகாவுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது ஈஸ்வரப்பாவை சந்திப்பேன் என்றும் மோடி கூறியதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலளித்த ஈஸ்வரப்பா, மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமரிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கர்நாடக சட்டசபை தேர்தல் 2023: நட்சத்திர பிரச்சாரகர் பட்டியலில் முக்கிய பெயர்கள் மிஸ்ஸிங்!

“பிரதமருக்கு ஊழலில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியதை இது நிரூபிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

"இந்தியாவின் ஜனநாயகத்திற்கு இது ஒரு சோகமான நாள். பாஜகவுக்கு உயிர் ஒரு பொருட்டல்ல என்று அவர் காட்டியுள்ளார். கட்சியில் கலகம் செய்யாததற்காக, ஈஸ்வரப்பாவுக்கு பிரதமர் பாராட்டுக்களை தெரிவிக்கிறாரா? ஈஸ்வரப்பா. 40 சதவீத கமிஷன் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டவர், தற்கொலை செய்து கொண்ட பாஜக தொண்டர் சந்தோஷ் பாட்டீல், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார்" என்று சுர்ஜேவாலா கூறினார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு தலைவரின் ஆதரவை பிரதமர் மோடி நாடுவது என்பது வெறும் வாக்குகளுக்காகவே என்று சுர்ஜேவாலா குற்றம் சாட்டுகிறார்.

மேலும் படிக்க | கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் அரசியலில் இருந்து விலகும் பாஜக மூத்த தலைவர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News