ஜாமியா நூலகத்தில் போலீஸார் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது!!
டெல்லி: ஜாமியா மிலியா பல்கலைகழக நூலகத்தில் புகுந்து மாணவர்கள் மீது, டெல்லி போலீசார் தாக்குதல் நடத்திய சிசிடிவிக் காட்சிகளை ஜாமியா போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர்.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜாமியா மிலியா பல்கலைகழக மாணவர்கள் மீது, கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லி போலீசார் தடியடி நடத்தினர்.
மேலும் பல்கலைகழக நூலகத்திற்குள் புகுந்து போலீசார் மாணவர்களை தாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவிக் காட்சிகள், ஜாமியா ஒருங்கிணைப்பு குழு எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் முகத்தை மூடியபடி உள்ளே நுழையும் போலீசார் அங்கிருந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
Exclusive CCTV Footage of Police Brutality in Old Reading Hall, First floor-M.A/M.Phill Section on
15/12/2019
Shame on you @DelhiPolice @ndtvindia @ttindia @tehseenp @RanaAyyub @Mdzeeshanayyub @ReallySwara @ANI @CNN @ReutersIndia @AltNews @BBCHindi @the_hindu @TheQuint @BDUTT pic.twitter.com/q2Z9Xq7lxv— Jamia Coordination Committee (@Jamia_JCC) February 15, 2020
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமாக போராட்டம் நடத்தினார்கள். இந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றார்கள். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.
இந்த போராட்டம் நடந்த போது, அங்கு வந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அதேபோல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நூலகம் வரை சென்று கூட போலீசார் மாணவர்களை தாக்குதல் நடத்தினார்கள். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாணவர்களை மோசமாக தாக்கியுள்ளனர். அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து, தற்போது இந்த போலீஸ் தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ ஒன்றை ஜாமியா மிலியாவின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது 49 நொடி வீடியோ ஆகும் இது. ஜாமியா மிலியாவில் உள்ள எம். பில் லைப்ரரி படிக்கும் மையத்தில் உள்ள சிசிடிவி வீடியோ ஆகும் இது. ஜனவரி 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பின் இது பதிவாகி உள்ளது. இதில் அங்கு படித்துக் கொண்டு அமைதியாக இருக்கும் மாணவர்களை போலீசார் தாக்கி உள்ளனர்.
போலீஸ் கவச உடையுடன் உள்ளே வந்து, அங்கிருந்த மாணவர்களை மிக மிக மோசமாக தாக்கி இருக்கிறார்கள். போராடாமல், அமைதியாக படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்களை இப்படி போலீசார் தாக்கி உள்ளனர். லத்திகள் மூலம் படிக்கும் மாணவர்களை முரட்டுத்தனமாக போலீசார் தாக்கியது வீடியோவில் பதிவாகி உள்ளது. போலீசின் முந்தைய வாதம் இதன் மூலம் பொய் என்று நிரூபணம் ஆகி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.