ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக்கொள்ள கூடாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை விஷத்துடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "தேசம், சமுதாயம் மற்றும் தலித்துகளுக்கு இது விஷம்" என்று கூறினார் ராகுல் காந்தியை எச்சரிக்கை செய்தார், அனைவருக்கும் விசத்தை சுவைப்பதற்கான விளைவுகள் என்னவென்று அனைவருக்கும் தெரியும்.
நாடு முழுவதும் தனது கருத்தை ஊக்குவிக்கவும், திணிக்கவும் விரும்பும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள கூடாது. காங்கிரஸ் கட்சியின் போராட்டம் பிரதமர் மோடிக்கு எதிரானது அல்ல, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்திற்கு எதிரானது" என்றும் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்று நாள் நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சொற்பொழிவு நிகழ்ச்சியின் அழைப்பை ஏற்றுக்கொள்ள கூடாது என ராகுல்காந்திக்கு சில மூத்த கட்சித் தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
Senior Congress leaders in core group meeting have advised Rahul Gandhi to not accept RSS program invitation: Sources pic.twitter.com/dHMbNWf2UE
— ANI (@ANI) August 30, 2018
அடுத்தமாதம் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் நாள் வரை புதுடெல்லியில் ‘Future of Bharat: An RSS’ perspective’ என்னும் தலைப்பில் RSS சார்பில் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் CPI(M) மூத்த தலைவர் சித்தாராம் யச்சூரி ஆகியோருக்கு அழைப்புவிடுக்க RSS திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.