Heeraben Modi Death : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின மறைவை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்தனர். தாயாரின் மறைவை அடுத்து அகமதாபாத் விரைந்தார்.
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியும் அவரது தாயாரை மருத்துவமனையில் வந்து சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டே நாள்களில் பிரதமரின் தாயார் உயிரிழந்துள்ளார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Sending my deepest sympathy and heartfelt condolences in this hour of grief. May you find peace & comfort in the memories you shared with your mom. (2/2)
— M.K.Stalin (@mkstalin) December 30, 2022
அதில்,"அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயாருடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. நான் மிகவும் வருந்துகிறேன், உங்கள் இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
துயரமான இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் நீங்கள் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஹீராபென் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து நலமுடன் வீடு திரும்ப ஸ்டாலின் வாழ்த்து செய்து ட்வீட் செய்திருந்தார்.
Gujarat: Prime Minister Narendra Modi pays respect to his mother Heeraben Modi at Gandhinagar residence.
(Source: DD) pic.twitter.com/VJimh3FXZC
— ANI (@ANI) December 30, 2022
100 வயதான ஹீராபென் மோடி, பிரதமரின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகர் அருகே உள்ள ரேசன் கிராமத்தில் வசித்து வந்தார். பிரதமர் தனது பெரும்பாலான குஜராத் பயணங்களின் போது ரேசான் கிராமத்திற்கு சென்று தாயாரை அடிக்கடி சந்தித்து அவருடன் நேரத்தை செலவிடுவார்.
மேலும் படிக்க | மறைந்தார் கால்பந்து ஜாம்பவான் பீலே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ