ஜூலை 11, 13 தேதிகளில் தேர்வு முடிவுகள் என வெளியான செய்தி உண்மை இல்லை: CBSE விளக்கம்

10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும் என பரவும் செய்தி உண்மை இல்லை என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2020, 05:19 PM IST
ஜூலை 11, 13 தேதிகளில் தேர்வு முடிவுகள் என வெளியான செய்தி உண்மை இல்லை: CBSE விளக்கம் title=

CBSE Class 10 and 12 results 2020: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) கீழ் நடைபெற்ற 10 மற்றும் 12 வகுப்புகளின் தேர்வு முடிவுகள் ஜூலை 15-க்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இறுதி தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் 10 மற்றும் 12 வகுப்புகளின் தேர்வு ரிசல்ட் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது 12-ம் வகுப்பு முடிவு ஜூலை 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், 10 ஆம் வகுப்பு ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மை இல்லை, இது வெறும் வதந்தி என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

READ MORE - மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே CBSE பாடப்பிரிவுகள் நீக்கம்: பொக்ரியால்!

இதுபோன்ற சுற்றறிக்கைகளை நம்ப வேண்டாம் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு CBSE வாரியம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது போல, தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in இல் வெளியிடப்படும். எப்பொழுது வெளியாகும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

CBSE Exam Results

CBSE பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 190 பாடத்திட்டங்களில் அரசியல் அறிவியல் பிரிவில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியிருந்தது. இது பல்வேறு தரப்பிலும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

READ MORE - சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

இதனையடுத்து இந்த சர்ச்சை குறித்து பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் (Ramesh Pokhriyal), மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே CBSE பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டது. வேறு உள்நோக்கமில்லை என்று நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Trending News