சுமார் 4,64,000 ரூபாய் மதிப்பு கொண்ட போலி 500 ரூபாய் நோட்டுகளை, டெல்லியின் காஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) கண்டறிந்துள்ளது.
இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் நடைப்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் ஒரு வழக்கமான ரோந்துப் பணியின் போது, CISF விரைவு எதிர்வினை குழு துணை ஆய்வாளர் பீரேந்தர் குமார் கேட் எண் 8-க்கு அருகே கிடந்த ஒரு பையை ஆராய்கையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
CISF-ன் அறிக்கையின்படி, "ரூ.500 மதிப்பிடப்பட்ட, போலி நாணயத்தாள்கள் அடங்கிய பை, இங்குள்ள காஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தின் கேட் எண் எட்டுக்கு அருகில் கவனிக்கப்படாமல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது." என குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, CISF மற்றும் CISF கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பான ஸ்டேஷன் ஷிப்டுக்கு சப் இன்ஸ்பெக்டர் பையை குறித்த தகவலை தெரிவித்தார். உடனடியாக, அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, வெடிகுண்டு அகற்றும் குழு மற்றும் CISF-ன் நாய் குழுவால் சூழப்பட்டது.
சோதனைக்கு பின்னர் பையின் உள்ளே இருந்து சுமார் ரூ.4,64,000 மதிப்பிலான 500 ரூபாய் போலி நோட்டுகள் மீட்கப்பட்டது. இது குறித்து CISF மற்றும் DMRP-யின் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக போலி ரூபாய் நோட்டுகளுடன் மீட்க்கப்பட்ட பை டெல்லி மெட்ரோ ரயில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.