13-வயது சிறுமியின் கருக்கலைப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் கருவுற்ற 13-வயது சிறுமியின் கருவினை கலைக்க சத்தீஷகர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Jul 16, 2018, 08:38 PM IST
13-வயது சிறுமியின் கருக்கலைப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி! title=

சத்தீஷ்கர்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் கருவுற்ற 13-வயது சிறுமியின் கருவினை கலைக்க சத்தீஷகர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

சத்தீஷகர் உயர்நீதிமன்றம் நீதிபதி சன்ஜய் கே அகர்வால் இவ்வழக்கு தொடர்பாக உத்தரவிட்டுள்ளதாவது... பாதிகப்பட்ட சிறுமியின் கருகலைப்பானது ராய்பூர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிகழ வேண்டும்.

தலைமை மருத்துவர் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர் குழு இந்த சிகிச்சையில் ஈடுப்படவேண்டும் எனவும், சிறுமியின் மருத்துவ செலவினம் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அரசு மருத்தவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போத 26 வார கால கர்ப்பிணியாக உள்ளார். ராய்பூர் பகுதியில் வசித்து வந்த இவரை இவரது குடியிருப்புக்கு அருகில் இருந்த நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமியின் கருக்கலைப்பிற்கான அனுமதியினை கேரி அவரது தந்தை உயரிநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

Trending News