90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் உள்பட, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பினை தலைமை தேர்தல் ஆணையம் OP ராவத், கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் படி., சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக இன்று 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
#Chhattisgarh: Voting begins for 10 out of 18 seats in the first phase of #ChhattisgarhAssemblyElection2018 pic.twitter.com/n3mXyn4Nhd
— ANI (@ANI) November 12, 2018
பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சத்தீஸ்கரில் அடுத்த கட்டமாக எஞ்சிய பகுதிகளுக்கு வருகிற 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.