2023 India State Legislative Assembly elections 2023: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுடன் சேர்த்து சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் தேர்தல் முடிவுகளும் இன்று (டிசம்பர் 3) வெளியாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரை முக்கியமான 10 பெரிய முகங்கள் மீது அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது. சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முக்கிய 10 வேட்பாளர்கள் பட்டியல் குறித்து பார்ப்போம்.
முதல்வர் பூபேஷ் பாகேல்
சத்தீஸ்கர் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் பூபேஷ் பாகேல் பதான் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பூபேஷ் பாகேல் மீண்டும் மாநில முதல்வராக பதவியேற்பார் என்று நம்பப்படுகிறது. இதே தொகுதியில் அவருக்கு எதிராக பாஜக எம்பி விஜய் பாகேல் அவரை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர் முதல்வர் பூபேஷ் பாகேலின் மருமகனாவார். 2008 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பூபேஷ் பாகேலை தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் டிஎஸ் சிங்தேவ்
சத்தீஸ்கரின் துணை முதல்வரும், வருங்கால முதல்வருமான டிஎஸ் சிங்தேவ் அம்பிகாபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2008 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்று வருகிறார். அவரை எதிர்கொள்ள லக்கன்பூர் நகர் பஞ்சாயத்து தலைவராக இருந்த தொழிலதிபர் ராஜேஷ் அகர்வாலை பாஜக நிறுத்தியுள்ளது. இந்த முறை டிஎஸ் சிங் தியோ தனது கோட்டையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ராமன் சிங் ராஜ்நந்த்கான்
சத்தீஸ்கரின் பாஜகவின் முக்கியத் தலைவரும், நீண்ட காலம் முதல்வராக இருந்தவருமான ராமன் சிங் ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். 2003 முதல் 2018 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிரீஷ் தேவாங்கன் போட்டியிடுகிறார். மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றால் ரமண் சிங்கின் அதிர்ஷ்டம் மீண்டும் அவர் முதல்வராகலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க - EXIT POLL 2023: சத்தீஸ்கரில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி! மீண்டும் “கை”
பாஜக மாநிலத் தலைவர் அருண் சாவ்
சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் அருண் சாவ் தற்போது பிலாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இந்த முறை, கட்சி அவரை லோர்மி சட்டமன்ற தொகுதியில் நிறுத்தியுள்ளது. இவர் ஓபிசி பிரிவில் இருந்து வந்தவர். ஒருவேளை பாஜக வெற்றி பெற்றால் முதல்வர நாற்காலி இவருக்கும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவரை எதிர்த்து காங்கிரஸின் தனேஷ்வர் சாஹு களத்தில் உள்ளார்.
சபாநாயகர் சரதாஸ் மஹந்த்
காங்கிரஸ் மூத்த தலைவர் சரதாஸ் மஹந்த், சட்டசபையின் சபாநாயகராக உள்ளார். இவர் கடந்த மூன்று முறை சக்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வருகிறார். இத்தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இந்த முறையும் காங்கிரஸ் அவரை லோர்மி தொகுதியில் நிறுத்தியுள்ளது. அவரை எதிர்த்து கில்வான் சாஹூவுக்கு பா.ஜ., டிக்கெட் கொடுத்துள்ளது.
முன்னாள் முதல்வரின் மனைவி ரேணு ஜோகி
முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மனைவி ரேணு ஜோகி கோட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி பிலாஸ்பூர் மாவட்டத்தின் கீழ் வருகிறது. அவர் தனது கட்சியான ஜேசிசிஜே (Janta Congress Chhattisgarh) இன் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் பிரபால் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் பாஜக தலைவர் திலீப் சிங் ஜூதேவின் மகன். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அடல் ஸ்ரீவஸ்தவா களம் கண்டுள்ளார்.
காங்கிரஸ் முகமது அக்பர்
காங்கிரஸ் வேட்பாளர் முகமது அக்பர் கவர்தா தொகுதியில் போட்டியிடுகிறார். 2018 ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் பல துறைகளின் அமைச்சராகவும் ஆக்கப்பட்டார். அவருக்குப் போட்டியாக களம் பாஜகவைச் சேர்ந்த விஜய் சர்மா இறங்கப்பட்டு உள்ளார்.
மேலும் படிக்க - மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இதோ கருத்துக்கணிப்பு முடிவுகள்!
முன்னாள் முதல்வடின் மகன் அமித் ஜோகி
அமித் ஜோகி அம்மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன். முன்பு எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், இம்முறையும் தனது குடும்பக் கட்சியான ஜே.சி.சி.ஜே.யின் சீட்டில் பதான் தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு சத்னாமி சமூகத்தின் கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் அவர் பயனடையலாம். அவருக்கு போட்டியாக முதல்வர் பூபேஷ் பாகேலும், எம்பி விஜய் பாகேலும் போட்டியிடுகின்றனர்.
பாஜக ரேணுகா சிங்
சத்தீஸ்கரில் வெற்றிக் கொடியை ஏற்ற பாஜக மத்திய அமைச்சரும் எம்பியுமான ரேணுகா சிங்கை பாரத்பூர் சோஹந்த் தொகுதியில் நிறுத்தியுள்ளது. அவருக்கு போட்டியாக எம்எல்ஏ குலாப் சிங்கை காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. குலாப் சிங்கிற்கு இப்பகுதியில் நல்ல பிடி இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே ரேணுகா சிங் இந்த தொகுதியில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாஜக ஓபி சௌத்ரி
ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்த ஓபி சௌத்ரி, ராய்கர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது தேர்தல் பிரசாரத்திற்காக ராய்கர் வந்த போது, மக்களை பார்த்து நீங்கள் அவருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள். அவரை பெரிய ஆளாக்குவேன் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அனைவரின் கவனம் அவரின் மீது உள்ளது.
மேலும் படிக்க - INDIA கூட்டணியை சாய்த்ததா பாஜக...? Exit Poll சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ