தென் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை!!

தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது!!

Last Updated : May 28, 2018, 02:31 PM IST
தென் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை!! title=

தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது!!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் தொடங்கியது, இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில்  கோடை மழை பெய்து வருகிறது. இதனால், தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்..! 

தென் கிழக்கு அரபிக்கடலில் கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரையையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதியில் மீனவர்கள் 30-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். 

அடுத்த 48 மணிநேரத்தில் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது. அதன் பின்னர் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று(திங்கட்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிலகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.

 

Trending News