இந்தியாவின் பல வித பெருமைகளின் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ள சந்திரயான்-3 தனது இறுதி இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 இன் டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடித்தது. சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை சுற்றிவரும் நிலையில், மாலை சுமார் 4 மணி அளவில், அதன் சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்ரம் லெண்டர் நிலவுக்கு இன்னும் அருகில் சென்றுள்ளது. நிலவுக்கு நெருக்கமான சுற்றுப்பாதையில் அதன் பயணம் தொடர்கிறது.
விக்ரம் லேண்டரின் நிலை சீராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்ய, அதாவது மென்மையான முறையில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நிலையில், இந்த முக்கியமான டீபூஸ்டிங் செயல்முறையானது விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது.
Chandrayaan-3 Mission:
The Lander Module (LM) health is normal.LM successfully underwent a deboosting operation that reduced its orbit to 113 km x 157 km.
The second deboosting operation is scheduled for August 20, 2023, around 0200 Hrs. IST #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/0PVxV8Gw5z
— ISRO (@isro) August 18, 2023
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் ஏ சாராபாயின் பெயரிடப்பட்ட விக்ரம் லேண்டர், ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி அது சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. ஆகஸ்ட் 17 அன்று அதன் உந்துவிசை தொகுதியிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
157 கிமீ தொலைவில் உள்ள ஒரு சுற்றுப்பாதையில் தன்னை நிலைநிறுத்துவதற்கு விண்கலத்தின் வேகத்தை குறைக்கும் செயல்முறையை கொண்ட இந்த டீபூஸ்டிங் செயல்முறை ஒரு முக்கியமான கட்டமாகும். இந்திய விண்வெளி நிறுவனம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்கு டீபூஸ்டிங் செயல்முறையை நடத்தவுள்ளது.
மேலும் படிக்க | சந்திரயான்-3: தொடங்கியது இறுதி ஓவர்... வரலாறு படைக்க போகும் லேண்டர்..!
இந்த நிலைப்பாடு நிலவின் தென் துருவப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் மென்மையான தரையிறங்கும் முயற்சிக்கான தொடக்கப் புள்ளியாக செயல்படுகிறது. இதற்கிடையில், உந்துவிசை தொகுதி (ப்ரொபல்ஷன் மாட்யூல்) அதன் தற்போதைய சுற்றுப்பாதையில் இருக்கும். குறிப்பிட்ட மாதங்கள் அல்லது வருடங்களுக்கு இது மதிப்புமிக்க ஆராய்ச்சித் தரவை சேகரிக்கும்.
உந்துவிசை தொகுதியில் இருக்கும் ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹேபிடபிள் பிளானட் எர்த் (ஷேப்) என்ற விஞ்ஞான பேலோட், பூமியின் வளிமண்டலத்தின் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் ஆய்வை நடத்தி, பூமியில் உள்ள மேகங்களிலிருந்து துருவமுனைப்பு மாறுபாடுகளை அளவிடும்.
முன்னதாக, ப்ராபல்ஷன் மாட்யூலிலிருந்து லேண்டர் மாட்யூலைப் பிரித்த பிறகு சந்திரயான் லேண்டர் எடுத்த புகைப்பட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் ஆனது ஆகஸ்ட் 15 மற்றும் 17ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. இதில் நிலவின் இருண்ட பகுதியில் இருக்கும் பள்ளங்கள் தெளிவாகத் தெரிகிறது.
Chandrayaan-3 Mission:
as captured by the
Lander Position Detection Camera (LPDC)
on August 15, 2023#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/nGgayU1QUS— ISRO (@isro) August 18, 2023
சந்திரயான் மிஷன்
சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2-க்கு தொடர்ச்சியான ஒரு செயல்திட்டமாகும். சந்திரயான் செயல்திட்டம், நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்குவதையும் நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஒரு ரோவரை அங்கு நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலவின் கலவை மற்றும் புவியியல் பற்றிய தரவுகளை ரோவர் சேகரிக்கும். இது நமது பூமிக்கு அருகில் உள்ள புதிரான நிலவின் வரலாறு மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை விஞ்ஞானிகளுக்கு வழங்கும்.
இந்த பணியானது இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. இதன் மூலம் நிலவுக்கு வெற்றிகரமான செயல்திட்டங்களை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் பெருமையுடன் சேர்ந்துள்ளது.
மேலும் படிக்க | நிலவை நெருங்கும் சந்திரயான்... விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட உள்ள லேண்டர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ