2021 இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு

தடுப்பூசி ஒன்றே இதற்கான தீர்வு  என்று உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, இது வரை 18 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 13, 2021, 09:04 PM IST
  • ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி, 75 கோடி டோஸாக இருக்கு என மதிப்பிடப்படுகிறது.
  • அதே நேரத்தில் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 55 கோடி டோஸாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி 15.6 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு  title=

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசி ஒன்றே இதற்கான தீர்வு  என்று உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, இது வரை 18 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை (Corona Virus) கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் (COVISHIELD) மற்றும்  பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் (Covaxin) ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை நாட்டில் 17 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதோடு, ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி அடுத்த வாரத்திற்குள் சந்தையில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறையுடன் மாநிலங்கள் போராடி வரும் நிலையில், நம்பிக்கை ஊட்டும் செய்தியாக, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், அந்த ஐந்து மாத காலகட்டத்தில், இருநூறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டில் கிடைக்கும் என்று மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. இது நாட்டின் முழு மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி, 75 கோடி டோஸாக இருக்கு என மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 55 கோடி டோஸாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், பாரத் பயோடெக் அதன் நாசி வழியாக கொடுக்கப்படும்  தடுப்பு மருந்தும், பரிசோதனையில் உள்ள நிலையில், அதன் உற்பத்தி 10 கோடி டோஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி 15.6 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | Sputnik V தடுப்பூசி விற்பனை எப்போது தொடங்கும்; அரசு கூறுவது என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News