தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி

புதிய சீர்திருத்தங்கள், தொலைத்தொடர்பு துறையின் கட்டமைப்பை மாற்றும் என்பதோடு தொழில் துறை மேலும் விரிவுபடுத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2021, 05:36 PM IST
தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி  title=

தொலைத் தொடர்பு துறையில் கட்டமைப்பு தொடர்பான 9 சீர்திருத்தங்கள் மற்றும் நடைமுறை தொடர்பான 5 சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டம், தொலைதொடர்பு நிறுவனங்களால் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஏஜிஆர் கட்டணத்தை மறு மதிப்பீடு செய்ய, அவற்றை வகைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், டெலிகாமில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு (Foreign Direct Investment) அமைச்சரவை ஒப்புதல் வழாங்கியுள்ளது என்றும், தொலைத் தொடர்பு பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைப்பதற்கான செலவுகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த விதி  சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பொருந்தாது என்றும் கூறினார். புதிய சீர்திருத்தங்கள், தொலைத்தொடர்பு துறையின் கட்டமைப்பை மாற்றும் என்பதோடு தொழில் துறை மேலும் விரிவுபடுத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

ALSO READ | பிரதமர் நரேந்திர மோடி சன்சத் டிவி சேனலை இன்று தொடங்கி வைக்கிறார்

தொலைதொடர்பு அல்லாத அனைத்து வருவாயும் ஏஜிஆரிலிருந்து (Adjusted gross revenue- AGR) நீக்கப்படும் என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். இது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். "லைசென்ஸ் கட்டணம், ஸ்பெக்ட்ரம் பயனர் கட்டணங்கள் மற்றும் அனைத்து விதமான கட்டணங்கள் தொடர்பாக அதிக வட்டி, அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவற்றின் மீது மாதாந்திர கூட்டுக்கு பதிலாக வருடாந்திர கூட்டுவட்டி வசூலிக்கப்படும்,"  என தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கூறினார்

தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களுக்கு MCLR + 2% வட்டி விகிதம் அமல்படுத்தடும் என கூறியதோடு, தவிர அபராதங்களை முற்றிலும் நீக்குகிறது. புதிய சீர்திருத்தங்கள் தொலைத்தொடர்பு துறையில் பெரிய அளவிலான முதலீடுகளுக்கு வழி வகுக்கும் என்று அமைச்சர்  நம்பிக்கை வெளியிட்டார். "முதலீடு என்றால் வேலைவாய்ப்பு - அதிக முதலீடு, அதிக வேலைவாய்ப்பு" என்று அஷ்வினி வைஷ்னா மேலும் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News