சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்ற தகவல் பொய்யானது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது!!
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 27 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று செய்தி வெளியானது. தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள மாணவர்கள் ஆவலாக காத்திருந்தனர்.
ஆனால் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று சிபிஎஸ்இ செய்தித் தொடர்பாளர் ரமா சர்மா கூறியுள்ளார். மேலும் அவர் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என பரவும் செய்தி உண்மையல்ல. தேர்வு முடிகள் இன்று வெளியாகாது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Rama Sharma, PRO CBSE: There is unconfirmed fake news being circulated on some social media platforms about CBSE class X results being announced today. It is to inform all Principals, students, parents and public that CBSE class X results will not be declared today. pic.twitter.com/Ta6Gdn7PYf
— ANI (@ANI) May 5, 2019
கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியவர்களில் 86.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.