பாஜக MLA மீது பாலியல் புகார் கூறிய பெண் விபத்து வழக்கு CBI-க்கு மாற்றம்

பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவர்களின் நண்பர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் சென்ற கார் மீது லாரி மோதிய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2019, 04:53 PM IST
பாஜக MLA மீது பாலியல் புகார் கூறிய பெண் விபத்து வழக்கு CBI-க்கு மாற்றம் title=

புதுடெல்லி: பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவர்களின் நண்பர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் சென்ற கார் மீது லாரி மோதிய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் புகார் அளித்து ஒரு வருடமாகியும் எந்தவித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய இளம் பெண், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றார். இதன் பிறகு தான், இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. 

இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டப்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்க முயற்ச்சி செய்தேன். ஆனால் அதிகாரிகள் பலரிடம் புகார் அளித்தப்போதிலும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. முதல்வரிடம் தெரிவித்த போதிலும் தகுந்த நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் இல்லையேல் தற்கொலை செய்துக் கொள்ளுவேன் எனக் கூறினார்.

ஆனால் இந்த விவாகாரம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் தெரிவிக்கையில், என்னை சுற்றிச்சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சம்வத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்த போதே மரணமடைந்துள்ளார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது. பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கைதுசெய்யக் கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன்பின்னர், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் சென்காரின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  குல்தீப் சிங் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் சிறையில் உள்ளார்.

ஆனால் நேற்று பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், பெண்ணின் தயார், உறவினர் மற்றும் வழக்கறிஞருடன் காரில் ரேபரேலி சென்று கொண்டிருந்த போது, அவரின் கார் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் அவரது தாய், உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் தெரிவித்துளார். இந்த விவகாரம் இன்று இருஅவைகளிலும் எதிரொலித்தது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவர்களின் நண்பர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் சென்ற கார் மீது லாரி மோதிய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

Trending News