CBI இயக்குநராக அலோக் வர்மா பதவியேற்றதும், CBI தற்காலிக இயக்குநர் நாகேஸ்வரராவ் மேற்கொண்ட இடமாற்றங்களை ரத்து செய்தார்!
மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, CBI இயக்குநராக நீடிக்கலாம் என்று கூறி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து 77 நாட்கள் விடுப்பபுக்கி பின்னர் நேற்றைய தினம் அவர் மீண்டும் CBI இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார்.
CBI director Alok Verma withdraws transfer orders made by M Nageswara Rao who was appointed as interim CBI Director. Section 4 and 5 of transfer orders not withdrawn. pic.twitter.com/MytrkgBf4M
— ANI (@ANI) January 9, 2019
CBI இயக்குநராக பதவியேற்ற அலோக் வர்மா, மத்திய அரசால் தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வரராவ் மேற்கொண்ட இடமாற்றங்களை ரத்து செய்தார். எனினும் பிரிவு 4 மற்றம் பிரிவு 5 இடமாற்ற உத்தரவுகளை திரும்பப் பெறவில்லை என தெரிகிறது.
ஒரிசா மாநிலத்தில் IPS அதிகாரியாக பதவிவகித்த நாகேஸ்வரராவ், CBI இயக்குநராக கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் நாள் பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்ற அடுத்த நாள் காலை நகேஸ்வரராவ் பல்வேறு இடமாற்ற உத்தரவுகளை பிரப்பித்தார். CBI சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா-வின் மீதான லஞ்ச புகார் வழக்கினை பரிசீலித்த அதிகாரிகள் ஏகே பாஷி, MK சின்ஹா, இணை இயக்குநர் AK ஷர்மா ஆகியோரும் நகேஸ்வரராவ் உத்தரவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மீண்டும் CBI இயக்குநராக பதவியேற்றுக்கொண்ட அலோக் வர்மா, நாகேஸ்வரராவ் மேற்கொண்ட இடமாற்றங்களை ரத்து செய்தார்.