Budget 2022 LIVE Streaming Online: பட்ஜெட் உரை எங்கே, எப்படி பார்ப்பது?

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை எந்த டிவி, யூடியூப் சேனலில் பார்க்க முடியும்?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 09:59 AM IST
  • காலை 11 மணிக்கு மக்களவையல் பட்ஜெட் 2022
  • 2 மணி நேரங்களுக்கு பட்ஜெட் உரை நடைபெறும்
  • டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
Budget 2022 LIVE Streaming Online: பட்ஜெட் உரை எங்கே, எப்படி பார்ப்பது? title=

2022-23 நிதியாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத் தொடரில் 2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2022-23 ஆண்டுல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில், இந்த கூட்டத் தொடரின் 2 வது நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2022) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட் ஆகும். இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 மணி நேரங்களுக்கு பட்ஜெட் உரை நடைபெறும். இந்த பட்ஜெட் உரையானது டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் செசனின் இரண்டாம் பாதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும்.

ALSO READ | Union Budget 2022 Live: மத்திய பட்ஜெட் 2022 இன்று, முக்கிய தகவல்கள் இதோ

Budget 2022 LIVE Streaming Online: எங்கே பார்ப்பது?
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை நீங்கள் sansad TV இல் நேரடியாகப் பார்க்கலாம். இது நாடாளுமன்ற அவைகளுக்கான நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் அரசு தொலைக்காட்சியாகும். அதேபோல, தூர்தர்ஷன் டிவியிலும் பட்ஜெட் நேரலையை நீங்கள் பார்க்கலாம். யூடியூபில் பார்ப்பதாக இருந்தால் sansad TV யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படும். Zee News Live டிவியிலும் நிதி அமைச்சரின் நேரடி உரையை ஆன்லைனில் பார்க்கலாம். பட்ஜெட் 2022ஐ பிப்ரவரி 1 ஆம் தேதி Zee News செயலியில் நேரலையில் ஒளிபரப்படும்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, யூனியன் பட்ஜெட் 2022-23ஐ 'Union Budget Mobile App' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

When Budget 2022’s live streaming will begin? 
மேலே குறிப்பிட்டுள்ளபடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். ஊடக அறிக்கைகளின்படி, 2022 பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சர் சீதாராமன் சுமார் 90 முதல் 120 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், அவர் சில நீண்ட பட்ஜெட் உரைகளை ஆற்றியுள்ளார். உதாரணமாக, 2019 இல், அவர் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார், இது இந்திய வரலாற்றில் மிக நீண்ட உரையாக அமைந்தது. இருப்பினும், 2020 இல், அவர் கிட்டத்தட்ட 162 நிமிடங்கள் உரை நிகழ்த்தி தனது சொந்த சாதனையை முறியடித்தார்.

ALSO READ | Budget 2022: எதிர்பார்ப்புகளும்.. மத்திய அரசின் திட்டமும்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News