Budget 2022 எதிர்பார்ப்புகள்: நேரடி வரிகளில் சலுகைகள், சுங்கவரியில் நிவாரணம்!!

நேரடி வரிகள் பற்றி பேசுகையில், வேலைவாய்ப்பு போன்ற பரந்த மேக்ரோ இலக்குகளை ஊக்குவிக்க சில முக்கிய சலுகைகள் இந்த பட்ஜெட்டில் கோரப்படுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2022, 09:59 AM IST
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2022 அன்று மத்திய பட்ஜெட் 2022-ஐ தாக்கல் செய்ய உள்ளார்.
  • பட்ஜெட் தொடர்பான பல எதிர்பார்ப்புகள் அனத்து தரப்பு மக்களிடமும் உள்ளன.
  • HDFC வங்கி பல்வேறு தரப்பினரின் முக்கிய எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டியுள்ளது.
Budget 2022 எதிர்பார்ப்புகள்: நேரடி வரிகளில் சலுகைகள், சுங்கவரியில் நிவாரணம்!!  title=

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2022 அன்று மத்திய பட்ஜெட் 2022-ஐ தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தொடர்பான பல எதிர்பார்ப்புகள் அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளன. 

பட்ஜெட் (Budget 2022) தாக்கல் செய்யப்பட சில நாட்களே உள்ள நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கி, 'நிதி இருப்பு மற்றும் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்' (Fiscal Balance and Budget Expectations’) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு தரப்பினரின் முக்கிய எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டியுள்ளது. 

எச்டிஎஃப்சி வங்கி அதன் நிதி இருப்பு மற்றும் பட்ஜெட் எதிர்பார்ப்பு அறிக்கையில் கூறியவை பின்வருமாறு:

1. ஹெச்டிஎஃப்சி வங்கி, "நேரடி வரிகள் பற்றி பேசுகையில், வேலைவாய்ப்பு போன்ற பரந்த மேக்ரோ இலக்குகளை ஊக்குவிக்க சில முக்கிய சலுகைகள் கோரப்படுகின்றன. உதாரணமாக, பணியில் புதிதாக சேர்ந்துள்ள புதிய ஊழியர்களின் கழிப்பிற்கான பண வரம்பை அதிகரிக்க ஒரு திட்டம் உள்ளது. 80JJAA பிரிவின் கீழ் இந்த வரம்பை மாதம் ரூ.25,000-லிருந்து ரூ.1 லட்சம் ஆக அதிகரிக்க கோரிக்கை உள்ளது." என்று கூறியது. 

2. "ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளையான REIT-கள் மற்றும் கட்டுமானப் பணிகள் சார்ந்த நிறுவனங்களின் முதலீட்டு அறக்கட்டளையான InvstIT-களின் விஷயத்தில், வரிவிதிப்புகளில் மாற்றம், குறிப்பாக நீண்ட கால மூலதன ஆதாயங்களை மற்ற சொத்து வகுப்புகளுக்கு இணையாகக் கொண்டு வருவது பற்றியும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படலாம்" என்று HDFC குறிப்பிட்டது.

3. நாட்டின் ஸ்டார்ட்அப், நிறுவனங்களுக்கான சூழலைக் கருத்தில் கொண்டு கருத்து தெர்வித்துள்ள HDFC வங்கி, " நாட்டு குடிமக்களால் நிறுவப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10% சலுகை விகிதத்தை நீட்டித்து, அதன் மூலம் வணிக களத்தை சமன் செய்யவும் கோரிக்கை உள்ளது" என்று கூறியது.

ALSO READ | Budget 2022: பட்ஜெட் தயாரிப்புகள் தீவிரம்! தனியார் துறையினரிடம் மத்திய அரசு ஆலோசனை

4. எச்டிஎஃப்சி வங்கி சுங்க வரிக் குறைப்புகளைப் பற்றியும் கூறியுள்ளது. "சப்ளை பற்றாக்குறை மற்றும் அதிக உலகளாவிய பணப்புழக்கம் ஆகியவற்றின் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்தன. பொருட்களின் விலை உயர்வு (Inflation) காரணமாக இந்திய உற்பத்தியாளர்கள் அதிக உள்ளீட்டு செலவுகளால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

"இதை எதிர்கொள்ள, இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளில் குறிப்பாக முதன்மையான பொருட்களில் சுங்க வரி குறைக்கப்பட வேண்டும் என தொழில்துறையினர் கோரியுள்ளனர். இதில் நிலக்கரி, எத்தனால், உலோகவியல் கோக் மற்றும் காப்பர் ஸ்கிராப் ஆகியவை அடங்கும். தொலைத்தொடர்பு இணைப்பு போன்ற சில சிறப்பம்சம் வாய்ந்த தொழில்நுட்ப அம்சங்களிலும் ஆப்டிகல் ஃபைபரிலும் வரி குறைப்பு கோரப்பட்டுள்ளது. இவற்றில் தற்போதைய வரிகள் மிக அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது" என வங்கி மேலும் கூறியது.

5. ஹாஸ்பிடாலிடி துறை பற்றி குறிப்பிட்டுள்ள HDFC வங்கி (HDFC Bank), இந்த தொழில்துறையானது கொள்முதல் மீதான சுங்க வரிகளில் ஏதுவான மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கிறது என குறிப்பிட்டுள்ளது. கோவிட்-19 ஆல் வெகுவாக பாதிக்கப்பட்ட இந்த துறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கான தனிப்பயன் வரி நிவாரணத்தையும் இந்த தொழில்துறை கோரியுள்ளது. 

"இடைநிலையில் உள்ள அனைத்துக்கும் ஒற்றை விகிதத்துடன் எளிமைப்படுத்தப்பட்ட சுங்கக் கட்டமைப்பையும் இறுதிப் பொருட்களாக அடையாளம் காணப்பட்டவைக்கு அதிக விகிதங்களையும் நிர்ணயிப்பதற்கான ஒரு செயல்முறைக்கான பரந்த கோரிக்கை உள்ளது" என்று வங்கி தனது நிதி இருப்பு மற்றும் பட்ஜெட் எதிர்பார்ப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News