சபர்மதி ஆசிரமத்தில் நூல் நூற்ற பிரிட்டன் பிரதமர்

இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ராட்டையை சுழற்றி நூல் நூற்றார்.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 21, 2022, 04:24 PM IST
  • போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை
  • பிரதமரான பின் முதல்முறையாக இந்தியா வருகை
  • சபர்மதியில் ராட்டை சுற்றிய போரிஸ் ஜான்சன்
சபர்மதி ஆசிரமத்தில் நூல் நூற்ற பிரிட்டன் பிரதமர் title=

2 நாள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்துள்ளார். லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று போரிஸ் ஜான்சனை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, அவரது வாகனம் சென்ற பாதையில் உற்சாக நடனமாடி வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார்

Brittan PM Boris Johnson Paid Respect to Mahatma Gandhi

இதனைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.  அங்கு மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார். பின்னர் கை ராட்டையில் நூல் நூற்ற அவர், சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தது தனது பாக்கியம் எனவும், உண்மையையும், அகிம்சையையும் பயன்படுத்தி உலகை மாற்றிய மனிதரைப் பற்றி தெரிந்துகொண்டது தனது பாக்கியம் என பார்வையாளர்கள் குறிப்பேட்டில் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ள அவர், காந்திநகரில் உள்ள பிரசித்தி பெற்ற அக்சர்தம் கோயிலைப் பார்வையிடவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை டெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். 

பிரிட்டன் பிரதமரின் இந்த பயணத்தின்போது ஒரு பில்லியன் பவுண்ட் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | உக்ரைனுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர்...அதிபர் செலன்ஸ்கியுடன் ஆலோசனை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News