கச்சா எண்ணெய் வீழ்ச்சி: கடந்த 1 ஆண்டில் இல்லாத அளவுக்கு குறைந்த பெட்ரோல் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், இந்தியாவில் ஏற்ப்பட்ட மாற்றம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2018, 09:13 AM IST
கச்சா எண்ணெய் வீழ்ச்சி: கடந்த 1 ஆண்டில் இல்லாத அளவுக்கு குறைந்த பெட்ரோல் விலை title=

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் உள்நாட்டு சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றம் ஏற்ப்பட்டு உள்ளது.

நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 3.33 டாலர்கள் (6.16 சதவீதம்) குறைந்து பீப்பாய்க்கு டாலர் 50.77 அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இதனால் இன்ஹ்டியாவின் உள்நாட்டு சந்தையில் பெட்ரோல் விலை ஏற்கனவே ரூ. 70 நிலைக்கு கீழே வந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை சில பைசாக்கள் அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 பைசா குறைக்கப்பட்டது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 72.41 ஆக உள்ளது.

அதேபோல டெல்லி, மும்பை கொல்கத்தா என முக்கிய நகரங்களில் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால் பெட்ரோல் டெல்லியில் ரூ. 69.86, மும்பையில் ரூ. 75.41, கொல்கத்தாவில் ரூ. 71.89 என விற்கப்படுகிறது.

இந்த வருடம் ஆரம்பத்தில் ஜனவரி 1, 2018 அன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.53 ஆகா இருந்தது. இதுத்தவிர, டீசல் விலையில் 9 மாதங்கள் கழித்து மாற்றம் வந்துள்ளது. சென்னையில் டீசல் விலை மார்ச் 28, 2018 அன்று 67.25 ல் ரூபாயாக இருந்தது. 

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையுடன் ஒப்பிடுகையில், கடந்த 12 மாதங்களை விட இன்று தான் மிகக்குறைந்த விலையில் பெட்ரோல் விற்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், உள்நாட்டு சந்தையில் விலையும் குறைகிறது. இதனால் சாதாரண மக்களுக்கு சற்று ஆறுதல் கிடைக்கிறது. 

Trending News