கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் (West Bengal), இன்று காலை (ஆகஸ்ட் 26, 2020) 4.1 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இது மாநிலம் முழுவதும் மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. தகவல்களின்படி, குறைந்த தீவிரம் கொண்ட பூகம்பத்தின் மையம் துர்காபூரில் இருந்தது என்று தெரியவந்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் (Durgapur) இன்று காலை 7:54 மணிக்கு ரிக்டர் அளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
“4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 26-08-2020, 07:54:02 IST, Lat: 23.79 மற்றும் Long: 88.36, 10 கி.மீ ஆழத்தில், மேற்கு வங்காளத்தின் துர்காபூரின் 110 கிமீ ENE இல் ஏற்பட்டது” என்று நிலநடுக்கவியல் மையம் அதன் செய்தி அறிக்கையில் கூறியுள்ளது.
இருப்பினும், இதுவரை இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வரவில்லை.
இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ALSO READ: ஹரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!