பி.டி.பி. கட்சியுடனான கூட்டணியை முறித்தது பாஜக!!

ஜம்மு-காஷ்மீர் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக!!

Last Updated : Jun 19, 2018, 03:18 PM IST
பி.டி.பி. கட்சியுடனான கூட்டணியை முறித்தது பாஜக!! title=

15:17 19-06-2018

ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவி விலகல் கடிதத்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கு மெகபூபா முப்தி அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை மெகபூபா முப்தி சந்தித்து விளக்கம் தருகிறார். 

 


ஜம்மு-காஷ்மீர் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக!!

காஷ்மீர் முதல்வராக இருந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரியில் காலமானார். அவர் இறந்த பிறகு மாநிலத்தில் பி.டி.பி. மற்றும் பா.ஜ.க கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் பா.ஜ.,வுடனான கூட்டணி எனது தந்தை முப்தி முகமது சயீதின் விருப்பத்தில் அமைந்தது என அவரது மகள் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பி.டி.பி. - பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து வந்தது. இந்நிலையில், தற்போது கார்ஷ்மீரில் மேஹபூபா முப்தி அரசுடனான கூட்டணியை முறிவு தொடர்பான அறிவிப்பை பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் வெளியிட்டார். 

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடர்ந்து நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளுக் இடையிலான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அங்கு நிலவி வரும் வன்முறையும், பயங்கரவாதம், பத்திரிக்கையாளர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் போன்ற நிகழ்வுகள் கூட்டணியை பாதித்தது என்றும் பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் பி.டி.பி. அரசானது சிறப்பாக செயல்பட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்தோம் ஆனால் அது அனைத்தும் செயலற்றுபோனது. பி.டி.பி கட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்காக ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக ராம் மாதவ் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், 87 எம்.எல்.ஏ-களை கொண்ட பேரவையில் பாஜகவுக்கு 25, பிடிபி கட்சிக்கு 28 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போது பிடிபி கட்சிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி கவிழ வாய்ப்பு உண்டு எனவும் காஷ்மீரில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பிடிபி கட்சிக்கு 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

 

Trending News