ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் சீமா பத்ரா. பாஜகவின் மூத்த பெண் தலைவராக பதவி வகித்து வரும் இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ராவின் மனைவி ஆவார்.
இந்த பத்ரா தம்பதியினர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கும்லா என்ற கிராமத்தில் இருந்து சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளனர். இவர் முதலில் பத்ரா தம்பதியின் மகள் வட்சலா பத்ராவுடன் உதவிக்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் வட்சலா பத்ராவிற்கு இடமாற்றம் கிடைத்த பின்னர் மீண்டும் சுனிதா ராஞ்சியிலுள்ள பத்ரா தம்பதியினரின் இல்லத்திற்கே அழைத்து வரப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி சுனிதா பற்கள் உடைக்கப்பட்டு, உடலில் பல்வேறு காயங்களுடன் பத்ரா குடும்பத்தினர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டார்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தாளாளர் உட்பட 4 பேருக்கு ஐகோர்ட் ஜாமீன்
மீட்கப்பட்ட சுனிதாவால் எழுத்து நிற்க கூட முடியவில்லை. உணவு தண்ணீர் இன்றி பல நாட்கள் சுனிதா அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் சுனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் மற்றும் மன நல மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். சற்று உடல் நலம் தேறிய சுனிதாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.
விசாரணையில், சுனிதாவை சீமா பத்ரா பல்வேறு முறையில் தாக்கி காயப்படுத்தியதாக தெரிய வந்தது. சுனிதாவை இரும்பு ராடு கொண்டு அடித்து பற்களை உடைத்து, உடலின் பல்வேறு பகுதிகளில் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், இரும்பு ராடை சூடுபடுத்தி அதை வைத்து சுனிதாவிற்கு சூடு வைத்துள்ளார்.
மேலும், பத்ரா குடும்பத்தின் வீட்டு கழிவறையை சுனிதாவை நாக்கு கொண்டு சுத்தம் செய்யவும் சீமா வற்புறுத்தியுள்ளார். நாக்கால் சிறுநீரை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் நிர்பந்தித்துள்ளார். மறுத்த சுனிதாவை அடித்து கொடுமை செய்துள்ளார். மேலும் சுனிதாவை இவ்வாறு கடந்த 8 வருடங்களாக சீமா பத்ரா கொடுமை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே பத்ரா தம்பதியின் மகன் ஆயுஸ்மான் பத்ரா தனது நண்பரின் உதவியுடன் சுனிதாவிற்கு நடந்த கொடுமைகளை வெளிகொணர்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த புகார் வெளியாகி சில மணி நேரத்தில் பாஜக நிர்வாகம் சீமா பத்ராவை பதவியில் இருந்து விலக்கி அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று ஜார்கண்ட் போலீஸாரால் சீமா பத்ரா கைது செய்யப்பட்டார். விரைவில் நீதிமன்றத்தில் ஆஜார் செய்வித்து, சிறையில் அடைக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ’குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது’ ஸ்ரீமதி தாயார் கண்ணீர் பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ