பாஜக MPக்கள் மார்ச் 22 ஆம் தேதி மக்களவைக்கு தவறாமல் வர வேண்டும்; பாஜக கொறடா உத்தரவு

பாஜக தலைமையிலான அரசு திங்கள்கிழமை (மார்ச் 22) மூன்று முக்கியமான மசோதாக்களை கொண்டு வர உள்ளது. மசோதா பட்டியலில் நிதி மசோதா 2021 என்பது மிக முக்கிய மசோதா ஆகும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 20, 2021, 01:27 PM IST
  • பாஜக தலைவர் ராகேஷ் சிங் கொறடா உட்த்ஹரவை வழங்கினார்
  • BJP தலைமையிலான மத்திய அரசு திங்கள்கிழமை (மார்ச் 22) மூன்று முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற உள்ளது
  • மசோதா பட்டியலில் நிதி மசோதா 2021 என்பது மிக முக்கிய மசோதா ஆகும்.
பாஜக MPக்கள் மார்ச் 22 ஆம் தேதி மக்களவைக்கு தவறாமல் வர வேண்டும்; பாஜக கொறடா உத்தரவு title=

புதுடெல்லி: பாஜகவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி  கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது.  திங்கள்கிழமை (மார்ச் 22) மக்களவைக்கு (Loksabha) தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு நிதிகளுக்காக புதிய வங்கிகளை ஏற்படுத்துவது தொடர்பான மசோதாவை அரசாங்கம் கொண்டு வரக்கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, வேறு இரண்டு மசோதாக்களைக் கொண்டு வரப்பட உள்ளன.

பாஜக (BJP) தலைவர் ராகேஷ் சிங்  இந்த கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளார். 

ALSO READ | WhatsApp புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசு

திரு.ராகேஷ் சிங் கையெழுத்திட்ட கடிதத்தில், "மக்களவையில் உள்ள அனைத்து பாஜக உறுப்பினர்களும் 2021 மார்ச் 22 திங்கள் அன்று மிக முக்கியமான நாடாளுமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், விவாதத்தில் கலந்து கொள்ள தவறாமல் ஆஜராக வேண்டும். " என உத்தரவிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான அரசு திங்கள்கிழமை (மார்ச் 22) மூன்று முக்கியமான மசோதாக்களை கொண்டு வர உள்ளது. மசோதா பட்டியலில் நிதி மசோதா 2021 என்பது மிக முக்கிய மசோதா ஆகும்.

பிப்ரவரி 1 ம் தேதி நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "2021-22 நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதி முன்மொழிவுகளை அமல் படுத்தும் பொருட்டு இந்த மசோதாவை கொண்டு வருவார்." என மக்களவை வலைதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

 அரசியல் சார்ந்த மற்றொரு மசோதாவை  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  (Amit Shah) தாக்கல் செய்ய உள்ளார்.

ALSO READ | ஜமைக்காவிற்கு கொரொனா தடுப்பூசி; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் Chris Gayle

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News