போதையில் மணமகள் முகத்தில் மணமகன் செய்த காரியத்தால் திருமணமே கேன்சல்!

Bizarre Incident: போதையில் மணமகளின் முகம் முழுவதிலும் குங்குமத்தை பூசி மணமகன் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 6, 2023, 11:07 PM IST
  • இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
  • போலீசாரின் தலையீட்டால் பிரச்னை சுமுகமாக தீர்க்கப்பட்டது.
  • திருமண செலவுகளை இரு வீட்டாரும் பகிர்ந்துகொண்டனர்.
போதையில் மணமகள் முகத்தில் மணமகன் செய்த காரியத்தால் திருமணமே கேன்சல்! title=

Bizarre Incident: குடிபோதையில் மணமகன் தனது நெற்றிக்குப் பதிலாக முகம் முழுவதிலும் குங்குமத்தை பூசியதால், மணப்பெண் தனது திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

அவர் முகத்தில் குங்குமத்தை பூசிம்போது மணமகள் தடுத்துள்ளார். அதற்கு, மணமகன் அவரை அடித்திருக்கிறார். இந்த செயலுக்காக மணமகன் மற்றும் அவரது தந்தை, மணமகளின் குடும்பத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இறுதியாக காவல்துறையின் தலையீட்டின் பேரில் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

ஆடம்பரமான வரவேற்பு

இச்சம்பவம் நேற்று முன்தினம் (மே 4) உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் சகர்கட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. திருமண ஊர்வலம் அஹிராவுரா காவல் நிலையத்தின் மாணிக்பூர் கிராமத்தில் இருந்து மிர்சாபூருக்கு பெரும் ஆடம்பரத்திமான நிகழ்ச்சியாக நடைபெற்றுள்ளது. மணமகனின் குடும்பத்தினருக்கு மணமகளின் குடும்பத்தினர் மகிழ்வான வரவேற்பு அளித்து பின்னர் இரவு உணவு பரிமாறினர். 

மேலும் படிக்க | இந்த மணமகளின் 'மாமாகுட்டி' அந்த நாய்தான்: முழிக்கும் மணமகன், வைரல் வீடியோ

இதையடுத்து திருமண சடங்குகள் தொடங்கின. அர்ச்சகர் மணமகனை முதலில் மண்டபத்திற்கு வரச் சொன்னார், சிறிது நேரம் கழித்து மணமகள் பின்தொடர்ந்தார். மணமகன் குடிபோதையில் அந்த இடத்திற்கு வந்திருந்தாலும், அனைத்து சடங்குகளையும் செய்துள்ளார் என்பது தெரிந்தது. மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமத்தை பூசுமாறு அர்ச்சகர் சொன்னபோதுதான், சிக்கல் எழுந்தது. 

ஆத்திரமடைந்த மணப்பெண்

மணமகன், குடிபோதையில், மணமகளின் முகம் முழுவதிலும் குங்குமத்தை தடவியுள்ளார். மேலும் அவர் தடுக்க முயன்றபோது அவளை அடித்திள்ளார். உறவினர்கள் மணமகனை சமாதானப்படுத்தவும் மோசமான சூழ்நிலையை கையாளவும் முயன்றனர். கோபமும், ஆத்திரமும் அடைந்த மணப்பெண் எழுந்து, மாப்பிள்ளையை திருமணம் செய்ய மாட்டேன் என்று அறிவித்தார்.

பின்னர் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறி வீட்டிற்குள் சென்றார். திடீரென நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மணமகனுடன் வந்திருந்த விருந்தினர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். ஆனால், மணமகள் வீட்டார், மாப்பிள்ளை மற்றும் அவரது தந்தையை மடக்கி பிடித்தனர். தகராறு குறித்து தகவல் அறிந்ததும் சக்கர்கட்டா போலீசார் வந்தனர். மணமகன் மற்றும் மணமகள் இரு வீட்டாரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

செலவு பகிர்வு

இறுதியாக, திருமணம் நிறுத்தப்பட்டு, இதுவரை நடந்த திருமணச் செலவை இரு வீட்டாரும் செலுத்த சம்மதித்தனர். இதுகுறித்து நிலைய பொறுப்பாளர் சகர்கட்டா ராஜேஷ் குமார் கூறுகையில், "மணப்பெண் அந்த இளைஞரை திருமணம் செய்ய மறுத்தார். பரஸ்பர பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு தரப்பினரும் உடன்பாடு ஏற்பட்டது" என்றார். 

மேலும் படிக்க | கொட்டும் மழையில்... குடையுடன்.. மணமக்களின் வேற லெவல் டெடிகேஷன்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News