விஷமாக மாறும் காற்று.. சுவாசிப்பது கூட சிரமமாக உள்ளது.. N95 முகமூடி அணிய அறிவுரை!

Delhi Air Quality: டெல்லியை சூழ்ந்த புகை மூட்டம். பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு காற்று மாசடைந்து வருகிறது. மிகவும் மோசமா பிரிவில் காற்றின் தரம். N-95 முகமூடிகளை அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 31, 2023, 09:14 PM IST
  • பொது மக்கள் N-95 முகமூடிகளை அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்.
  • டெல்லி பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400ஐத் தாண்டியது.
  • மாசுபாடு ஒரு ஸ்லோ பாய்சன் என்கிறார்கள். சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.
விஷமாக மாறும் காற்று.. சுவாசிப்பது கூட சிரமமாக உள்ளது.. N95 முகமூடி அணிய அறிவுரை! title=

AQI Very Poor In Delhi: டெல்லியில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விஷக் காற்று வீசுகிறது எனக் கூறும் அளவுக்கு காற்றின் தரக் குறியீடு (AQI) 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது. இன்று (அக்டோபர் 31, செவ்வாய்க்கிழமை) காலை முதல் தேசிய தலைநகரில் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக டெல்லியின் காற்று கடந்த சில நாட்களாக விஷமாகவே மாறியுள்ளது. பல பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (AQI) மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் "கடுமையான வகையை" அடைந்தது. பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு காற்று மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் N-95 முகமூடிகளை அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

SAFAR இந்தியாவின் கூற்றுப்படி, டெல்லி முழுவதும் காற்றின் தரக் குறியீடு எண்கள் 336 ஆக பதிவு செய்யப்பட்டது. இது 'மிகவும் மோசமான' வகையைக் குறிக்கிறது. அதே நேரத்தில், டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) 400க்கு மேல் எட்டியது என அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர். 

காலை முதலே டெல்லி முழுவதும் பனிமூட்டமாக இருந்தது. மதியம் கூட வானிலை தெளிவாக இல்லை. மாலையிலும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது. மதியம் 1 மணியளவில் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400ஐத் தாண்டியது. இதில் சோனியா விஹார் தான் அதிக எண்ணிக்கையில் இருந்தது. அந்த பகுதியில் காற்றின் தரக் குறியீடு 428-ஐ தாண்டியது. 

மேலும் படிக்க - குண்டுவெடிப்புக்கு காரணம் என்ன...? வீடியோவில் பேசிய டொமினிக் மார்டின் - முழு பின்னணி

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 400ஐத் தாண்டிய பகுதிகள்

-- ஆனந்த் விஹார்- 401

-- முண்ட்கா- 428

-- ரோகிணி - 410

-- பூத் குர்த் பவானா- 410

கட்டாயம் N-95 முக கவசத்தை அணியுங்கள்

மாசுபாடு ஒரு ஸ்லோ பாய்சன் என்கிறார்கள் மருத்துவர்கள். மாசுக்கள் சுவாசத்தின் மூலம் உடலைச் சென்றடையும் போது, ​​அவை முதலில் சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலைப் பாதிக்கின்றன. பின்னர் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. எனவே மக்கள் காற்று மாசுபாட்டை சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. பாதுகாப்புக்காக N-95 முக கவசத்தை பயன்படுத்தவும். காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பதில் சாதாரண முகமூடிகள் கண்டிப்பா பயனுள்ளதாக இருக்காது.

டெல்லியில் அக்டோபர் மாதத்தில் காற்றின் தரம் மிக மோசமாக இருக்கிறது 

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட தரவுகளைப் பார்த்தால், 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அக்டோபர் 2021 மாதத்தில் மட்டும் டெல்லி காற்றின் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. அதுவும் ஆஸ்துமா, நுரையீரல் நோய், இருதய நோய் உள்ளவர்களுக்கு, குழந்தைகள், முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் கோளாறு ஏற்படுத்தும். வகையில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபரில் டெல்லியின் காற்றின் தரம் 2020 க்குப் பிறகு மிக மோசமான பிரிவில் இருக்கிறது. இதற்கு மழைப்பொழிவு இல்லாததே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, தலைநகரில் இந்த அக்டோபரில் சராசரி (AQI) 210 ஆகவும், கடந்த ஆண்டு 2022 அக்டோபரில் 210 ஆகவும், 2021 அக்டோபரில் 173 ஆகவும் இருந்தது. 

மேலும் படிக்க - கலவர பூமியான கிருஷ்ணகிரி... சின்ன தூசு பிரச்னை ஜாதி மோதலாக மாறியது - நடந்தது என்ன?

காற்றுத் தரக் குறியீடு என்றால் என்ன? 

காற்று தரக் குறியீடு (AQI) என்பது காற்றில் தங்கியுள்ள துகள்கள், ஓசோன், நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனோ ஆக்சைடு ஆகியவற்றின் அளவைக் குறிக்கிறது.

காற்றுத் தரக் குறியீடு எத்தனை வகைப்படும்?

காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index) எண்கள் ஆறு வகையாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

-- தூய்மையானது (சிறந்த நிலை)
-- திருப்திகரமானது (இயல்பானது)
-- மிதமானது (அசாதாரண நிலை)
-- காற்றில் மாசு அதிகம் (ஆரோக்கியமற்றது)
-- காற்றில் மிக அதிகம் (மிகவும் ஆரோக்கியமற்றது)
-- மிகவும் மோசமான வகை (அபாயகரமானது)

காற்றுத் தரக் குறியீடு எண்கள் என்றால் என்ன?

-- காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் தூய்மையானது. ஆபத்து இல்லை.

-- 51 முதல் 100 என்பது திருப்திகரமானது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை வரலாம். 

-- 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய நபர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படலாம்.

-- 201 முதல் 300 அளவுக்கு சென்றால், காற்றில் மாசு அதிமாக கருதப்படுகிறது. உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கு தீவிர பிரச்சனைகள் ஏற்படலாம்.

-- 301 முதல் 400 வரை சென்றால் காற்றில் மாடு மிக அதிகமாகும். அவசர நிலைமைகள் பற்றிய சுகாதார எச்சரிக்கை ஆகும்.

-- 401 முதல் 500 என்பது மிகவும் மோசமான காற்று மாசு என்று அளவிடப்படுகிறது. இது சுகாதார எச்சரிக்கை. அனைவருக்கும் அதிக ஆரோக்கிய விளைவுகள் ஏற்படலாம்

மேலும் படிக்க - WC 2023: ஹர்திக் வந்தால்.. இந்திய அணியில் இருந்து வெளியேறும் அந்த வீரர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News