நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்தம் பிரதான மாநிலங்களில் சாதாரண வாழ்க்கை முழுமையாக பாதிப்பு....
மத்திய அரசுக்கு எதிராக 10 தொழிற்சங்கத்தினர் வங்கி ஊழியர்கள், போக்குவரத்து துறையினர், மருத்துவத்துறை, தொலைத் தொடர்பு துறையினர் இன்றும், நாளையும் 48 மணி நேரம் இரண்டு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் வங்கி சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
AITUC, CITU, HMS, AIUTUC, TUCC, AICCTU, உள்பட மொத்தம் 10 அமைப்புகள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ. 18 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் உள்ளிட்டவை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதியில் சாளிகளிலும், ரயில் தண்டவலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை மற்றும் அரசுத் துறை தனியார் மயமாக்கப்படுவதற்கும், குறைந்த பட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் மற்றையவர்களுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று அனைத்து இந்திய மத்திய தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கங்களும் (AICCTU) உறுப்பினர்கள் பட்டேர்கான்ஜின் தொழிற்துறை பகுதியில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
Delhi: All India Central Council of Trade Unions (AICCTU) members hold protest in Patparganj industrial area against privatisation of public and government sector and demanding minimum wages, social security among others pic.twitter.com/jbfilCAwYN
— ANI (@ANI) January 8, 2019