பெங்களூரில் உள்ள கராச்சி பேக்கரியில், ‘கராச்சி’ எனும் பெயருக்கு எதிர்ப்பு வந்த நிலையில், தற்போது அந்த பெயர் மறைக்கப்பட்டது.
கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது.
அந்தவகையில் தற்போது பெங்களுருவின் இந்திராநகர் பகுதியில் கராச்சி பேக்கரி என்ற பெயரில் கடை இயங்கி வந்துள்ளது. அதில் உள்ள கராச்சி என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என அந்த கடை முன் திரண்ட சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் இந்த சூழ்நிலையை சமாளிக்க அந்த கடை ஊழியர்கள் உடனடியாக கராச்சி என்ற வார்த்தை மீது பேனர் ஒன்றை வைத்து அந்த வார்த்தையை மறுத்துள்ளனர். மேலும் அந்த பெயருக்கு மேலே இந்திய தேசிய கொடியும் வைக்கப்பட்டது.