போலி TRP ஊழல் தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக செய்தி சேனல்களின் TRP மதிப்பீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) வியாழக்கிழமை அறிவித்தது. சுமார் மூன்று மாதங்களுக்கு எந்தவொரு சேனலும் தன்னை நம்பர் ஒன் சேனல் என அறிய்விக்க இயலாது.
ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், "புள்ளிவிவரங்கள் குறித்த அமைப்பை சீர்படுத்தி வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தற்போதைய அளவீட்டு தரங்களை மதிப்பாய்வு செய்து மேம்படுத்தவும் கவுன்சில் விரும்புகிறது, இதன் காரணமாக, வாராந்திர மதிப்பீடு 12 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்” என BARC கூறியுள்ளது.
ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர முகவர் சார்பாக BARC தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையை அளவிட்டு கணக்கு செய்து மதிப்பீடுகளை வெளியிடுகிறது
ALSO READ | தினமும் 333 ரூபாய் சேமித்து கோடீஸ்வர் ஆவது எப்படி..!!!
முன்னதாக, டிஆர்பி ஊழலில் குறைந்தது ஐந்து பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். இந்த மாத தொடக்கத்தில் மும்பை காவல்துறை இந்த மோசடியை அம்பலம் செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் செய்தி சேனல்களின் ஊழியர்களும் அடங்குவர், இது தொடர்பாக அர்னாப் கோஸ்வாமி தலைமையிலான ரிபப்ளிக் தொலைக்காட்சி அதிகாரிகளையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ரிபப்ளிக் தொலைக்காட்சி எந்த தவறும் செய்ய என கூறியுள்ளது.
டி ஆர்பி ரேடிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து கருத்து தெரிவித்த செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (என்.பி.ஏ) இந்த முடிவை மிக சரியான திசையில் எடுக்கப்பட்ட முடிவு என்று பாராட்டியது.
இந்த 12 வாரங்களை பார்க் தனது அமைப்பை முழுமையாக சரிசெய்யவும், இந்தியா காணும் தகவல்களின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் பயன்படுத்த வேண்டும் என்று NBA ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ALSO READ | கேரளா தங்க கடத்தலில் தாவூத் இப்ரஹீம் கும்பலின் தொடர்பு உள்ளதா....NIA கூறுவது என்ன..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe