வரும் 29-ம் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம்

Last Updated : Jul 26, 2016, 07:26 PM IST
வரும் 29-ம் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் title=

பொதுத்துறை வங்கிகளை, தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, வங்கிகள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்ட வர மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர், வங்கி ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, , திட்டமிட்டபடி வரும் ஜூலை 29 ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Trending News