பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 9 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என SC உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை 9 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 19, 2019, 01:23 PM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 9 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என SC உத்தரவு title=

புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை இன்றிலிருந்து 9 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அத்வானி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டன. ஆனால், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சாட்டு வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 21 பேரை ரேபரேலி கோர்ட்டு 2001-ம் ஆண்டு விடுவித்தது. இதை அலகாபாத் ஐகோர்டு 2010 ஆம் ஆண்டு உறுதிசெய்தது. 

ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இரண்டு ஆண்டுக்குள் வழக்கை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை, இன்றிலிருந்து 9 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News