அயோத்தி தீர்ப்பு குறித்து கருத்து கூறிய ஒவைசி மீது வழக்கு பதிவு

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் அசாதுதீன் ஒவைசி மீது இன்று (திங்கள்கிழமை) வழக்கு பதிவு (FIR) செய்யப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 11, 2019, 09:15 PM IST
அயோத்தி தீர்ப்பு குறித்து கருத்து கூறிய ஒவைசி மீது வழக்கு பதிவு title=

புதுடெல்லி: கடந்த சனிக்கிழமை அன்று அயோத்தி வழக்கின் (Ayodhya Verdict) இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் (Supreme Court) வழங்கியது. அந்த தீர்ப்பை AIMIM தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி (Asaduddin Owaisi) ஆட்சேபித்தார். அயோத்தி (Ayodhya) வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தாம் உடன்படவில்லை என்று அவர் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், எங்களுக்கு நமது அரசியலமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்கள் சட்ட உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்தோம். இன்னும் தொடர்ந்து போராடுவோம். ஐந்து ஏக்கர் நிலம் நன்கொடை எங்களுக்கு தேவையில்லை. உச்சநீதிமன்றம் வழங்க கூறிய ஐந்து ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும். அந்த 5 ஏக்கர் நிலத்தை வாங்கும் மனநிலையில் நாங்கள் இல்லை என்று ஒவைசி கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியையும் ஒவைசி கடுமையாக சாடினர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் (Congress) கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டு உள்ளதும் என்றும் கூறினார்.

அயோத்தி சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது என்பது அனைவரும் தெரியும். AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி "நீதிமன்றத்தின் தீர்ப்பில் நான் திருப்தியடைய வில்லை. உச்ச நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது. அதனால் அதன் தீர்ப்பை தவிர்க்க முடியாதது" என்றார்.

ஓவைசி மேலும் கூறுகையில், நாங்கள் மகிழ்ச்சியடைய தேவையில்லை. ஒருவேளை மசூதி அங்கேயே இருந்தால், உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுத்திருக்கும்? இது சட்டத்திற்கு எதிரானது. பாபர் மசூதி (Babri Masjid) இடிக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன தீர்ப்பு வந்திருக்கும்? பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு, ராம் கோயில் கட்டும் பணி வழங்கப்பட்டு உள்ளது எனக் கூறினார்.

அயோத்தி வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அனைத்திந்திய மஸ்ஜிதே இதிஹாதுல் முஸ்லிம் (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசியின் அறிக்கை குறித்து அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board -AIMPLB) ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இவரின் இந்த அறிக்கையை பலர் கடுமையாக எதிர்த்தனர். அவரது அறிக்கை தொடர்பாக பல இடங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் அசாதுதீன் ஒவைசி மீது இன்று (திங்கள்கிழமை) வழக்கு பதிவு (FIR) செய்யப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் பவன் குமார் (Pawan Kumar Yadav) அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், இன்று ராமர்கோயில்-பாபர்மசூதி (Ayodhya temple-Mosque) வழக்கான அயோத்தி நிலப்பிரச்சனை குறித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் (Supreme Court) அனுமதி அளித்ததோடு, இஸ்லாமியர்களுக்கு மாற்று இடமளிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி (Justice of India) ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியது.

Trending News