Ayodhya Ram Temple: பூமி பூஜையில் சுமார் 250 பேர் பங்குகொள்ளக்கூடும்

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் 'பூமி பூஜை' விழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பூமி பூஜையில் 250 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 20, 2020, 10:14 AM IST
  • கோவிட் -19 தொற்றுநோயால் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இவ்விழாவில் கலந்து கொள்வார்கள்.
  • ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வார்.
  • பூமி பூஜை விழா தொடர்பான சடங்குகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.
Ayodhya Ram Temple: பூமி பூஜையில் சுமார் 250 பேர் பங்குகொள்ளக்கூடும்  title=

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் 'பூமி பூஜை' விழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பூமி பூஜையில் 250 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியின் முக்கியமான சாதுக்கள் மற்றும் ராமர் கோயில் (Ram Temple) இயக்கத்துடன் தொடர்புடைய அனைத்து மூத்த உறுப்பினர்களும் பூமி பூஜையில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தின் சில மூத்த அலுவலர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஸ்ரீ ராமஜம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் அழைக்கப்படுவார்கள் என்று அறியப்படுகிறது.

COVID-19 தொற்றுநோயால் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இவ்விழாவில் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் சில மூத்த அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள்.

ஆகஸ்ட் 5 ம் தேதி அயோத்தியில் (Ayodhya) உள்ள ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வார் என்ற செய்தியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1:10 மணி வரை பிரதமர் அயோத்தியில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. ராமர் கோயிலின் 'பூமி பூஜை' விழா தொடர்பான பிரார்த்தனைகள் மற்றும் பிற சடங்குகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.

பூமி பூஜையை காசி மற்றும் மற்றும் பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த சில பூசாரிகள் செய்து வைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராமஜம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சனிக்கிழமை (ஜூலை 18) அயோத்தியில் சந்தித்து கோயிலின் பூமி பூஜைக்காக ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய இரண்டு தேதிகளை நிர்ணயம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News