ராமஜென்ம பூமி வழக்கை 3 நபர் கொண்ட குழு இன்று SC-ல் விசாரணை!

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!!

Last Updated : May 10, 2019, 08:43 AM IST
ராமஜென்ம பூமி வழக்கை 3 நபர் கொண்ட குழு இன்று SC-ல் விசாரணை! title=

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!!

கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம்சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரிசமமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. நீதிபதி போப்டே விடுப்பில் இருந்ததால் கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற இருந்த விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 277 ஏக்கர் நிலத்தை ராம்லல்லா, நிர்மோயி அக்சரா, வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினருக்கு சமமாகப் பங்கிட்டுத் தரும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மீது 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

அரசியல் ரீதியாகவும் மதரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இப்பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காண்பதற்காக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் ஆன்மீகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மூன்று நபர் நடுவர் குழுவை கடந்த மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி, கேமரா முன்னிலையில் பல்வேறு இந்து, முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அயோத்தி பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காண முயற்சி மேற்கொண்டது.

இது தொடர்பாக எழுந்த கருத்துகளை தொகுத்து இந்தக் குழு தனது ஆய்வறிக்கையை சீல் வைத்த கவரில் கடந்த மே 6ம் தேதி தாக்கல் செய்தது. இதையடுத்து இன்று இந்த வழக்கின் விசாரணைத் தொடர உச்சநீதிமன்றம் முன்வந்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று இந்த சீல் வைத்த கவரைப் பிரித்து அறிக்கை குறித்து பரிசீலனை செய்ய உள்ளது.

 

Trending News