Pradeep Gupta Viral Video: தேர்தல் என்றாலே கருத்துக்கணிப்புகள் தவிர்க்க இயலாதவை. அந்த வகையில், இந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் (Opinion Poll) மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளும் (Exit Poll) அடுத்தடுத்து வெளியாக தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வந்தன.
குறிப்பாக, இம்முறை பாஜக அபரிமிதமான இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் பல மாநிலங்களில் படுதோல்வி அடையும் என்றும் கணித்தன. குறிப்பாக ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், இந்திய டூடே ஊடகத்துடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டது.
மேலும் படிக்க | ‘இந்த’ 5 தமிழக தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி முகம்! வெற்றி பெறப்போகிறவர்கள் யார்?
அந்த கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 401 தொகுதிகளை வெல்லும் எனவும் இந்தியா கூட்டணி 150 இடங்களுள் அடங்கிவிடும் என்றும் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 290+ தொகுதிகளிலும், காங்கிரஸ் 230+ தொகுதிகளிலும் முன்னணி பெற்றிருக்கின்றன. பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Pradeep Gupta crying. pic.twitter.com/kRRRNv3fsc
— Mohammed Zubair (@zoo_bear) June 4, 2024
இந்நிலையில் ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் குப்தா தனது கணிப்பு முற்றிலும் தவறாக போனதை அடுத்து, தொலைக்காட்சி சேனலின் நேரலை விவாத நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு வருந்தி உள்ளார். அவர் கண்ணீர் வடித்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆக்ஸிஸ் மை இந்தியா மட்டுமின்றி பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு பெரும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தனர். அத்தனை கணிப்புகளும் இன்று தவிடுபொடியாகி உள்ளன.
இருப்பினும், நமது Zee News நிறுவனம் நடத்திய AI Exit Poll என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, தற்போதைய நிலவரத்தை கச்சிதமாகவும், துல்லியமாகவும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ