அபுஜிண்டால் மற்றும் 11 பேர் குற்றவாளிகள் :மோக்கா கோர்ட்டு

Last Updated : Jul 28, 2016, 01:07 PM IST
அபுஜிண்டால் மற்றும் 11 பேர் குற்றவாளிகள் :மோக்கா கோர்ட்டு title=

அவுரங்காபாத் ஆயுத குவியல் வழக்கில் அபுஜிண்டால் மற்றும் 11 பேர் குற்றவாளிகள் என்று மோக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2006-ம் ஆண்டு அவுரங்காபாத் அருகே  மே 8-ம் தேதி 10 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 3 ஆயிரத்து 200 தோட்டாக்கள் மற்றும் 30 கிலோ வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கடத்தி சென்ற 2 சொகுசு கார்களை தீவிரவாத தடுப்பு படையினர் பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரை கைது செய்தனர். இதில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு ஜூண்டாலும் ஒருவர். பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த போது, போலீசாரிடம் அவர் சிக்கினார். பின்னர், அவர் நாடு கடத்தப்பட்டு தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். 

இதனிடையே, அவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக மேலும் 19 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 22 பேர் மீதும் மும்பை மோக்கா கோர்ட்டில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் இறுதி வாதம் நிறைவு பெற்றது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் கூறியதாவது:- அவுரங்காபாத் ஆயுத குவியல் வழக்கில் 12 பேரை குற்றவாளிகள் என்று மோக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.  லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியும், 26/11 மும்பை தாக்குதல் சூழ்ச்சியாளருமான அபு ஜூண்டால் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

2002-ம் ஆண்டு நடைப்பெற்ற குஜராத் கலவரத்தை தொடர்ந்து அப்போதைய குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி மற்றும் வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியாவை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்று மோக்கா கோர்ட்டு கூறி உள்ளது. நாட்டில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதிதிட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்று கோர்ட்டு கூறியது.

Trending News