குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அமித்ஷா, வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக, அகமதாபாத்தில் பிரமாண்ட பேரணி!!
பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற காந்திநகர் மக்களவை தொகுதி இந்த முறை அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அமித்ஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியுஷ்கோயல், ராம்விலாஸ் பாஸ்வான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோன்மணி அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து அவரது செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
From the road show in Gandhinagar Loksabha. pic.twitter.com/nqAeZCiFNZ
— Chowkidar Amit Shah (@AmitShah) March 30, 2019
இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அமித் ஷாவின் வேட்பு மனு தாக்கல் கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும், மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்றும் மாநில பாஜக கருதுகிறது.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.